பூவும் நானும்
ஒரு பூவும் நானுமாகத் தான்
பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை
ஆனால் பூ எனை வென்றுதான் விடுகிறது;
ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை
படிக்கிறது பூ,
காற்றினை அணைத்து
அன்பு செய்கிறது பூ,
கடவுளிற்கே வாசனை கூட்டி
சேவை ஆற்றுகிறது பூ,
சிறு உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு
தேனை உணவாக அளித்து பசி தீர்க்கிறது பூ,
பூத்தாலும் அழகு தருகிறது
காய்ந்தாலும் உரமாகிறது -
ஆனால், நான் இனி தோற்கப் போவதில்லை
பூ பூவாகவே வாழ்வதுபோல்
நானும் நல்ல மனிதனாக வாழ்ந்து
வெற்றி மலர்களாக திகழ்வேன்!
- வித்யாசாகர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.