Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 12
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

39.உங்களை மாதிரி படிக்கல...


வீட்டுக்கு வரும் மருமகனுக்கு மாமனார் மாமியார் எல்லாரும் நல்லா மரியாதை கொடுப்பாங்க. மருமகன் எது கேட்டாலும் அவங்க வாங்கிக் கொடுப்பாங்க. அதிலும் மருமகன் வந்துட்டாலே வீட்டுல உள்ள கோழியப் புடிச்சி அடிச்சி கொழம்பு வச்சிப் போடுவாங்க. மருமகன நல்லாக் கவனிச்சாத்தான் தங்களோட மகள நல்லா வச்சிக்குவாருங்கற எண்ணமும் அந்த உபசரிப்புல கலந்துருக்கும்.

மருமகன் மாமியார் கூட பேசுறதுக்கு முன்னே எல்லாம் கூச்சப்படுவாங்க. ஆனா மாமனாரு அப்படி இல்ல. அப்பாவுக்கும் பையனுக்குமுள்ள உறவு மாதிரிப் பேசிக்குவாங்க. சில மருமகங்க தாங்கள் ரெம்ப அறிவாளின்னு நெனச்சிக்கிட்டு எடக்கு மடக்கான கேள்விகள எல்லாம் மாமனாருக்கிட்ட கேட்டு அவங்களத் திக்குமுக்காடச் செய்வாங்க. அதுலயும் பதில சொல்ல முடியும்னாலும் அந்தப் பதிலால ஏதாவது பிரச்சனை வந்துருச்சின்னா என்ன செய்யறதுன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு ரொம்பப் பொறுமையாப் பதிலச் சொல்வாங்க.

சில பேரு தங்களோட அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டணும்னு நெனச்சிக்கிட்டு மாமனாருக்கிட்ட கேள்விமேல கேள்வி கேட்டு அவர மடக்கப் பாப்பாங்க. அதத் தெரிஞ்சிக்கிட்ட மாமனாரு மருமகனோட அறியாமையையும் வெட்டித்தனமான பந்தாவையும் வெளிச்சம்போட்டுக் காட்டுறமாதிரி பளிச்சுன்னு பதிலச் சொல்லுவாங்க.அதக் கேட்ட மருமகன் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருப்பாங்க. அதுமாதிரி மாமனாருகிட்ட மாட்டிக்கிட்ட மருமகனப் பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கி வருது.

நகரத்துல படிச்சிட்டு ஆசிரியர் வேலை பாத்துக்கிட்டு நகரத்துல குடியிருந்த ஒருத்தன் கிராமத்துல போயிக் கலியாணம் பண்ணிக்கிட்டான். பொண்ணு ரொம்ப அழகா இருப்பா. அதனால ரெம்ப விரும்பிக் கிராமமா இருந்தாலும் பரவாயில்லைன்னு நெனச்சிக்கிட்டு கிராமத்துப் பொண்ணக் கலியாணம் செஞ்சிக்கிட்டான்.

அவன் கலியாணம் செஞ்ச வீட்டுல பொண்ணோட அப்பா செக்குல எண்ணெயாட்டுற வேலை செஞ்சாரு. அவரே சொந்தமா செக்குப்போட்டு எண்ணெய எடுத்து வியாபாரம் பண்ணினாரு. ஒரே பொண்ணுங்கறதால தன்னோட பொண்ணுக்குச் சீருசெனத்தி நல்லா செஞ்சாரு. அதனால மருமகனுக்கு மாமனாரு மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் உண்டு.

மாமனாரும் மருமகன தன்னோட மகனாவே நெனச்சாரு. மாப்பிள்ளயும் பொண்ணும் ஒருநாள் கிராமத்துக்கு விருந்துக்கு வந்தாங்க. மாமியாக்காரி மருமகனும் மகளும் வந்துட்டாகளேன்னு நல்ல வெடக்கோழியா அடிச்சிக் கொழம்பு வச்சிருந்தா.கறிக்குழம்பு வாசனை வாசல் வரைக்கும் வந்து மூக்கைத் தொலைச்சது. மாமனாரு செக்கடியிலருந்து மாட்ட சுத்தவச்சிட்டு எறங்கி மருமகனப் பாத்துட்டு ஓடிவந்து, ‘‘வாங்க மாப்பிள.. நல்லாருக்கியளான்னு’’ கேட்டாரு. அவனும் மாமனாரப் பாத்து, ‘‘நல்லாருக்கேன் மாமா.. நீங்க நல்லாருக்கீங்களான்னு?’’கேட்டான்.

மாமியாகாரி, ‘‘சரிசரி ரெண்டுபேரும் வந்து சாப்புடுங்கன்னு’’ சொல்லி ரெண்டுபேருக்கும் சாப்பாட்டப் போட்டா. மாமனாரும் மருமகனும் பேசிக்கிட்டே சாப்புட்டாங்க. அப்ப மருமகங்காரன் மாமனாரப் பாத்து, ‘‘ஏம்மாமா நீங்கபாட்டுக்கு செக்கடியிலருந்து வந்துட்டிங்களே… மாடுக செக்கச் சுத்திக்கிட்டு வருமான்னு’’ கேட்டான்.

அதுக்கு மாமனாரு, ‘‘ஓ…மாடு அதுபாட்டுக்குச் சுத்திக்கிட்டே வரும் மாப்பிளே’’ன்னு சொன்னாரு. ஒடனே மருமகன் விடாம, ‘‘ஆமா மாடு செக்கச் சுத்திக்கிட்டே வருதுன்னு நீங்க எப்படி மாமா கண்டுபிடிப்பீங்கன்னு’’ அடுத்த கேள்வியையும் கேட்டான்.

அதக் கேட்ட மாமனாரு, ‘‘அது ரொம்பச் சுலபமானது மாப்பிளே... மாட்டுக கழுத்துல மணிகளக் கட்டியிருக்கேன் அதுக சுத்திக்கிட்டே வர்றபோது மணிச் சத்தம் கேக்கும். அதக் கேட்டுட்டு நான் மாடுக செக்கச் சுத்திக்கிட்டு இருக்குதுங்கன்னு நெனச்சிக்கிடுவேன்னு’’ சொன்னாரு.

மருமகன் இதோட கேள்வி கேக்குறத விட்டுடுவாருன்னு மாமனாரு நெனச்சாரு. ஏன்னா அவருக்குச் சாப்புடயில பேசறது புடிக்காது. இருந்தாலும் வீட்டுக்கு வந்த மருமகன் கேக்கறபோது பேசமா இருக்கவும் முடியல. மருமகங்காரன் தான் அறிவாளிங்கறதக் காட்டணும்னு நெனச்சிக்கிட்டு மாமனாரப் பாத்து, ‘‘எனக்கொரு சந்தேகம் மாமா. அந்த மாடுக செக்கச் சுத்திவராமா ஒரே இடத்துல நின்னுக்கிட்டு கழுத்த மட்டும் ஆட்டிக்கிட்டே இருந்துச்சுகன்னா நீங்க என்ன செய்வீங்கன்னு’’ கேட்டுட்டு மாமனாரப் பாத்தான்.மாமனாருக்குச் சரியான கோபம். என்னடா இவன் கிறுக்கன் மாதிரி தத்துப்பித்துன்னு கேள்விகேக்குறான்னு நெனச்சிக்கிட்டு அத வெளியில காடடாம ரொம்ப நறுக்குத் தரிச்சமாதிரி, ‘‘மாப்பிள்ள அந்த மாடுங்க ஒங்க மாதிரி அதிகம் படிக்கலைல்ல. அதனால அப்படிச் செய்யாதுகன்னு’’ சொன்னாரு.

அந்தப் பதிலக் கேட்ட மருமகனுக்கு ஏண்டா இப்படியொரு கேள்வியக் கேட்டம்னு ஆகிப்போச்சு. அப்பறம் அவன் பேசவே இல்லை. பேசமாச் சாப்பிட ஆரம்பிச்சான். இதக் கேட்ட மாமியாரும் மகளும் சமையக்கட்டுக்குள்ளாறப் போயி மாப்பிள்ள காதுல விழுகாமா விழுந்து விழுந்து சிரிச்சாங்க. இந்தக் கதையக் கேக்குறவங்க இன்னைக்கும் சிரிப்பாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1am.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License