இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


24. புனித காபா வரவேற்கிறது!

மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோம்.

எங்களின் பயணச் சுமைகளை ஒரு ரோபோ போல இறக்கி வைத்து விட்டு, கார் பறந்து மறைந்தது.

எங்களது பயணச்சுமைகளை எடுத்துக் கொண்டு நான்கைந்து இளைஞர்கள் ஓடினர்.

புனித மெக்காவில் திருட்டா?

அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடினோம்.

ஒரு காரின் முன் போய் நின்றனர்.

மூச்சு வாங்கினோம்.

‘என்ன பயந்து விட்டீர்களா? உங்களுக்கு உதவுவதற்காக உங்களின் பயணச் சுமைகளை தூக்கி வந்தோம். இந்தக்காரில் நீங்கள் உங்களின் ஹோட்டலுக்கு போகலாம். காபாவிற்குள் நுழையும் போது எங்கள் நால்வரின் நலனுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்!’ அவர்கள் பேசிய மொழி புரியவில்லை ஆனால் அவர்கள் சொல்ல வந்த விஷயம் புரிந்தது.

காரில் ஏறி அமர்ந்தோம்.

“அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் எந்த ஹோட்டலுக்கு போக வேண்டும்?”


“அல் அஜீஜிசியா, 24243 மெக்கா!”

“காபாவிலிருந்து எட்டு கிமீ தூரம்!”

ஐந்து சௌதி ரியால் வாங்கிக் கொண்டு ஹோட்டலின் முன் இறக்கி விட்டார் டாக்ஸி டிரைவர். இறங்கி வரவேற்பறைக்கு நடந்தோம்.

பிரமாண்டமான ஹோட்டல்.

நூற்றுக்கணக்கான நான்கு சக்கர வாகரங்கள் வந்த வண்ணம் போன வண்ணம் இருந்தன.

வரவேற்பறையின் முன் இஹ்ராம் ஆடை அணிந்த ஆடவர்கள் குழுமி அறை விசாரணை செய்து கொண்டிருந்தனர்.

இஹ்ராம் அணிந்து கொண்டு ஆர்னிகா நடந்து வரும் விதத்தை பத்து பக்கத்திற்கு வர்ணிக்கலாம். ஆனால், அப்படி வர்ணிக்க கூடாது என மனதை அடக்கிக் கொண்டேன்.

ஆர்னிகா புக்கிங் டாட் காமின் மூலம் அறை பதிவு பண்ணின பிரிண்ட் அவுட்டை நீட்டினார்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“ஜனவரி 23, 2025 மாலை நான்கு மணியிலிருந்து இரவு 11: 30 மணிக்குள் செக்கின். ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 26, 2025 மதியம் 12 மணியிலிருந்து மதியம் 2 மணிக்குள் செக் அவுட். மூன்று இரவுகள் தங்கல். க்யூன்ரூம். நானும் என் துணைவியாரும். அறை தயாராக இருக்கிறதா?”

நாங்கள் அறை முன் பதிவுக்கு பணம் ஏதும் கட்டவில்லை.

வரவேற்பாளர் வாங்கி வாசித்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியுமா என்பது சந்தேகமே. பிரிண்ட் அவுட் தாள்களை புரட்டிப்புரட்டிப் பார்த்தார்.

கணினியில் எதைஎதையோ தட்டிப் பார்த்தார்.

எங்களை உட்காரச் சொன்னார்.

எங்களது தாளை எடுத்துக் கொண்டு யாரிடமோ ஓடினார். அவரும் இவரும் வந்து எங்களை ஒரு முறை உறுத்தனர்.

எங்களுக்கு ஒரே குழப்பம்.

ஆர்னிகா புலம்ப ஆரம்பித்தார்.

“புக்கிங்கில் ஏதேனும் பிரச்சனையோ? ஜாஸ்மின் சரியாத்தானே பண்ணி இருந்தா? இவங்க நம்பள பாக்ற பார்வையே சரி இல்லையே? எனக்கு இஹ்ராமோட உட்கார்ந்திருக்றது கொஞ்சம் அன்ஈஸியா இருக்கு!”

“புருஷ்! லட்சக்கணக்கான இஹ்ராம் ஆண்களில் நீ ஒருவன். அல்லாஹ்வை நினை. தேவையற்ற எண்ணங்களை விரட்டு!”


மீண்டும் ரூம் புக் பண்ணிய ஹோட்டலின் முகவரியை உன்னித்தார் ஆர்னிகா

HOLIDAY IN MAKKAH AL AZIZIAH
8324 MASJID ASH SHAIKH BIN BAZ
AL AZIZIYAH DISTRICT. 2900
MAKKAH 24243. SAUDI ARABIA
966 12 556 9999 / 966 59530 5299 / 966 56 958 1755

நான் ஆர்னிகாவிடம், “ஏங்க உங்க முகநூல் நண்பர் பைரோஸ்கானை தொடர்பு கொண்டு அவரை இங்கு வர சொல்லுங்கள்!”

“வாட்ஸ் அப்பில் நாம் மெக்கா இறங்கி விட்டதை தெரிவித்தேன். பதில் இல்லை!”

“பைரோஸ்கான் என்ன செய்கிறார்?”

“அவர் ஒரு இமாம். இளம் வயது தான். மெக்காவில் ஆன்மிக வழிகாட்டியாக இருக்கிறார் என நினைக்கிறேன்…”

“இதே நீங்கள் ஒரு பணக்கார விஐபியாக இருந்தால் ஓடோடி வந்திருப்பார் இல்லையா?”

“அப்படிச் சொல்ல முடியாது. அவர் எங்கு வேலை செய்கிறாரோ? அங்கு பணிநேரக் கட்டுப்பாடுகள் எக்கச்சக்கமாய் இருக்குமோ என்னவோ?”

“ஒரு விஷயம். நீங்களும் நானும் பைரோஸ்கானை நம்பிதான் உம்ரா வந்துள்ளோம்...”

“திருத்திக்கொள் குட்டிம்மா… அல்லாஹ்வை நம்பிதான் உம்ரா வந்துள்ளோம்…”

“பார்ரா… நொடிக்கு 100 அல்லாஹ் சொல்ற….”

சிரித்தார் ஆர்னிகா.

“இமாம் பைரோஸ்கானோட நேரடியா பேச முடியாதா?”

“போட்டிங் ஆப் மூலம் பேசலாம்….”

“அவர் எண் என்ன?”

“00 966 56 080 44 96 (வாட்ஸ் அப் எண்)”

“மீண்டும் இப்போது அவருடன் பேசி பார்க்கிறீர்களா?”

“யாரையும் சார்ந்திருப்பது எனக்குப் பிடிக்காது!”

“என்ன அப்படி சொல்கிறீங்க? மக்கா மதீனா பார்க்க அவர் வழிகாட்டல் தேவைதானே? எல்லாவற்றையும் விட முக்கியம் நம்மோட ‘கடவுளுக்கு ஆயிரம் பெயர்கள்’ இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுப்பை அவர்தானே காபா முன் வெளியிடப் போகிறார்…”

“அவரிடம் நான் இப்போது பேசுகிறேன். அவர் இல்லாவிட்டாலும் நம் புத்தக வெளியீடு நடக்கும்!”

போட்டிம் செயலி மூலம் பைரோஸ்கானை தொடர்பினோம்.

“அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வஅலைக்கும் ஸலாம். ஹோட்டலுக்கு வந்து விட்டீர்களா?”

“வந்துவிட்டோம்… ஆனால் சிறு பிரச்சனை… உட்கார வைத்திருக்கிறார்கள்!”

“ஒரு பிரச்சினையும் இல்லை. சரி செய்து கொடுத்து விடுவார்கள்!”

“நீங்கள் வந்தால் பேருதவியாக இருக்கும்!”


“மன்னிக்க வேண்டும் நான் என் பணியைச் செய்யும் நிறுவனம் சார்பாக தாயிப் போய்க் கொண்டிருக்கிறேன்!”

“நீங்கள் தானே இஸ்லாமிய நீதிக்கதைத் தொகுப்பை வெளியிட வேண்டும் என்றிருந்தேனே…”

“நாளை மறுநாள் காலை வந்து விடுவேன். வெளியிடலாம்!”

“சரி!”

“நீங்கள் அறைக்குப் போய் ஓய்வெடுத்து விட்டு பஜ்ரு தொழுகைக்கு முன் காபாவுக்கு வந்து விடுங்கள். என் உதவியாளர் கிங் அப்துல் அஜீஸ் கேட்டில் உங்களுக்காக காத்திருப்பார். மூன்றரை நாட்களும் உங்களுடன் இருந்து உதவுவார்!”

“மகிழ்ச்சி!”

திறன்பேசியை அமர்த்தினார் ஆர்னிகா.

வரவேற்பாளர் அழைத்தார்.

“நீங்கள் ரூம் புக் பண்ணிய ஹோட்டல் இதுவல்ல… மன்னிக்கவும்…”

விக்கித்தோம்.

“தெளிவான முகவரி கொடுத்திருக்கிறோமே...”

“இங்குள்ள ஹோட்டல்களின் பெயர்கள் அவ்வப்போது மாறும்…”

“நாங்கள் என்ன செய்ய?”

“உங்களின் ஹோட்டல் இதுவாக இருக்கும் என யூகித்து அந்த ஹோட்டலின் புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்… அதனை டாக்ஸி டிரைவரிடம் காட்டுங்கள்… அவர் உங்களை புதிய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார்!”

“ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!”

“உங்களுக்கு எங்கள் ஹோட்டலில் அறை கொடுக்க முடியாமைக்கு அல்லாஹ் எங்களை மன்னிக்கட்டும்….’

டாக்ஸி டிரைவர் ஹோட்டல் ஒளிப்படத்தை வாங்கி பார்த்தார்.

இருவரும் பயணச்சுமைகளுடன் காரில் ஏறினோம்.


கார் பல ஹோட்டல்களின் வாசல்களுக்கு போய் வந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினார்.

ஹோட்டல் AZZARIN HOTEL 2 (AL AZIZIYAH NORTH. AL ZAMZAMI ST. IN FRONT OF AL FATH MOSQUE)

நாங்கள் தேடிய ஹோட்டல் அதுதான்.

வரவேற்பறையில் வரவேற்றனர். தரைத்தளத்தில் அறை ஒதுக்கினர்.

நோ தூக்கம்.

இருவரும் குளித்துவிட்டு காபா நோக்கி விரைந்தோம். “இஸ்லாமிய நீதிக் கதைகள் எழுதும் தம்பதியினரே! அஸ்ஸலாமு அலைக்கும்! வாருங்கள்! புனித காபா உங்களை வரவேற்கிறது!”

புனிதகாபா பிரம்மாண்டமாய் விஸ்வரூபித்து இரு கை நீட்டி எங்களை வரவேற்றது! 

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p24.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License