ஒரு புனிதமான இடத்தில் பல அதிசயமான அமைப்புகளும் இணைந்திருக்கும். அப்படி காபாவுடன் இணைந்ததுதான் ஜம்ஜம் கிணறு.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்ராஹீம் நபியின் மனைவி ஹஜரும் மகன் இஸ்மாயீலும் தாகம் தாளாது சபா -மர்வா மலைக்கு இடையே ஏழுமுறை அலைந்து திரிந்தனர்.
அப்போது இஸ்மாயீல் நபி கைகளை மண்ணில் தட்டிய போது வானவர் தலைவர் ஜிப்ரயீல் கட்டளைப்படி பாலைவன மணலில் நீர் ஊற்றெடுத்தது. ஜம்ஜம் நீர் பொங்கி வழிந்தது. தாகம் தீர்ந்த பின் ஹஜர் நீரூற்றை பார்த்து “ஜம்ஜம்!” (நில்
தங்கு) எனக் கூறினார்.
கடந்த ஐயாயிரம் வருடங்களாக பாலைவன மக்களின் தாகத்தை தீர்க்கும் ஜம்ஜம் ஒரு வற்றாத நன்னீர் ஆதாரமாகும். புனிதமானதும் கூட.
ஜம்ஜம் நீரூற்றுக்கு பல பெயர்கள் உள்ளன.
1. ஷபாஉ சுப்ம் (Shifa Suqm - நோய்களைக் குணப்படுத்தும் நீர்)
2. ஷுபா (Shuba - பசியைப் போக்கும் நீர்)
3. ஹஃபீரத் (Hafirat abdul Muttalib - அப்துல் முத்தலிப்பின் கிணறு)
4. சுவக்யா அல் ரிவா (Suqya Al- Riwa - தாகம் தீர்க்கும் நீர்)
5. மக்தூமா (Mahtuma - மறைக்கப்பட்ட அல்லது காக்கப்பட்ட கிணறு)
6. மத்னூனா (Madnuna - விலைமதிப்பற்ற நீர்)
7. ஹஸ்மத் ஜிப்ரயில் (Hazmat Jibroil - ஜிப்ரயீலான ஊற்று)
8. தயாபா (Taybah - தூய்மையான நீர்)
ஜம்ஜம் கிணற்றுநீரை முஸ்லிம்கள் குடிப்பதற்கென ஒரு முறை இருக்கிறது.
‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி மூன்று மூச்சாக வயிறு நிறைய ஜம்ஜம் நீர் குடிப்பது சுன்னத். குடித்து முடித்ததும் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூற வேண்டும்.
“யா அல்லாஹ்! பயனுள்ள கல்வியையும் விசாலமான வாழ்வாதாரத்தையும் எல்லா நோய்களிலிருந்தும் நிவாரணத்தையும் உன்னிடம் கேட்கிறேன்!” என துஆ ஓத வேண்டும்.
‘ஜம்ஜம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது’ என்கிறது இஸ்லாம்.
ஜம்ஜம் கிணற்றை மீண்டும் கண்டுபிடித்தவர் முஹம்மது நபியின் தந்தை வழி தாத்தா மற்றும் பனு ஹாஷிம் குலத்தலைவர் மற்றும் நபிகள் நாயகத்தின் பாதுகாவலர் அப்துல் முத்தலிப். இவருக்கு கனவில் ஜம்ஜம் காட்டப்பட்டு தோண்ட
உத்தரவு வந்தது.
தோண்டிய போது ஜம்ஜம் கிணற்றில் ஜுர்ஹும் கோத்தரத்தாரின் வாள்களும் கவச சட்டைகளும் தங்கத்தால் ஆன இரு மான் சிலைகளும் கிடைத்தன.
ஜம்ஜம் கிணற்றின் அமைவிடம். மக்காவின் மஸ்ஜிதுல் ஹரம் மசூதிக்கு கிழக்கே சுமார் 20 மீட்டர் தொலைவில் காபாவுக்கு அருகில் ஜம்ஜம் அமைந்துள்ளது.
ஜம்ஜம் கிணற்றின் ஆழம் நூறு அடி. கிணறு இரு பிரிவுகளாக உள்ளது. ஒரு பகுதி 42 அடி ஆழமான பகுதி. மற்றொரு பகுதி வண்டல் மண் கூடிய 56 அடி பகுதி.
ஜம்ஜம் கிணற்றில் மூன்று நீரூற்றுகள் உள்ளன. கிணறு காளான்கள் போன்ற கற்களால் சூழப்பட்ட ஒரு கான்கிரீட் கட்டமைப்பாய் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜம்ஜம் கிணற்றின் பூமிக்கடியில் உள்ள நீர்நிலை Aquifer அடிப்படையாகக் கொண்டது.
கிணற்றின் விட்டம் 3 அடி 7 அங்குலம் முதல் 8அடி 9 அங்குலம்.
இஸ்மாயீல் நபி ஜுர்ஹும் கோத்தாரத்தாரின் பெண்ணை மணந்தார். அவரது மகன் காபாவையும் ஜம்ஜம்மையும் பாதுகாத்தார்.
அவருக்குப்பின் ஜுர்ஹும் கோத்தரத்தார் ஜம்ஜம்மை பாதுகாத்தனர்.
ஒரு காலகட்டத்தில் ஜம்ஜம்மை அப்பாஸ், அவருக்கு பின் அப்துல்லா அவருக்குப் பின் அலி, அவருக்குப் பின் தாவூத், அவருக்குப் பின் சுலைமான், அவருக்குப் பின் இஸா, அவருக்குப் பின் இஸாவின் சகோதரர் அல் மன்சூர், அவருக்குப் பின் உமையாத் பேரரசு பாதுகாத்தது.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு ஜம்ஜம் கிணறு எவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்திருந்தது என பார்ப்போம்.
நபிகள் நாயகம் சிறுவனாய் இருந்த போது ஹலிமா அஸ் சாதியா வீட்டில் இருந்தார். அப்போது வானவர் தலைவர் ஜிப்ரயீல் நபிகள் நாயகத்தைத் தனியே கொண்டு போய்ப் படுக்க வைத்து அவரது நெஞ்சில் கீறினார். இதயத்தைத் தனியே எடுத்தார்.
இதயத்திலிருந்து சைத்தானுக்குரிய சிறு சதையை அகற்றினார். பின் ஜம்ஜம் நீர் நிறைந்த தங்கதாம்பாளத்தில் நபிகள் நாயகத்தின் இதயத்தை சுத்தம் செய்தார். பின் மீண்டும் அதனை நபிகள் நாயகத்தின் நெஞ்சில் பொருத்தினார்.
பிற்காலத்தில் அனஸ் நபிகள் நாயகத்தின் நடுநெஞ்சில் தைக்கப்பட்ட வடுவை பார்த்ததாக சாட்சியம் கூறியிருக்கிறார்.
ஜம்ஜம் கிணறு அதிநவீன நீர் இறைக்கும் கருவிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. நொடிக்கு 11 லிட்டரிருந்து 19 லிட்டர் நீர் இறைக்கப்படுகிறது. உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரீகர்கள் வருகையின் போது நீர் தேவை அதிகம். கிங் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் ஜம்ஜம் நீர் திட்டம் ஜம்ஜம் கிணற்றை நிர்வகிக்கிறது.
கிணற்று நீரை வடிகட்டுவது. கிணற்று நீரை குடிப்பதற்கு உகந்த கிருமிகள் இல்லாத நீராக மாற்றுவது. அதன் பின் அந்தச் சுத்தமான நீரை விநியோகிப்பது. இந்த நீர்த்திட்டத்தின் செயல்பாடுகள்.
விநியோகிக்ப்படும் நீர் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பைப்புகளில் கொண்டு செல்லப்படுகிறது. ஜம்ஜம் நீரின் தரத்தை தினசரி சௌதி அதிகாரிகளும் தேசியச் சுகாதார நிறுவனமும் பகுப்பாய்வுக்கு அனுப்புகின்றன.
தினசரி 80 ஜம்ஜம் மாதிரிகள். ஜம்ஜம் நீரில் கரையக்கூடிய அயனிகள், சுங்கு கூறுங்கள், ஒட்டு மொத்த கோலிபார்ம் பேக்டீரியா எண்ணிக்கை மற்றும் ஈ-கோலை எண்ணிக்கை ஆராயப்படுகிறது.
ஜம்ஜம் நீரில் ஈயம் (Pb), காட்மியம் (Cd), ஆர்சனிக் (As), ஜோலோட்ரானிக் அமிலம் (Za), காப்பர் (Cu), நிக்கல் (Ni), கோபால்ட்(Co), வித்தியம் (Li), இரும்பு (Fe), மங்கனீஷ் (Mn), குரோமியம்(Cr), பாஸ்பேட் (Po₄), நைட்ரஜன் ஆக்ஸைடு (NO₂), புரோமின் (Br), புளோரைடு (F), அம்மோனியம்(NH₄) இருக்கிறதா என ஆராய்வர்.
நீர் தரக் குறியீடு அட்டவணையின் (WQI) படி ஜம்ஜம் நீரின் 94 சதவீத மாதிரிகள் குடிக்கத் தகுதியானவை. இரண்டு சதவீத மாதிரிகள் நைட்ரேட் அயனிடன் காணப்படுகின்றன. அவை குடிக்கத் தகுதி இல்லாதவை.
பொதுவாக ஜம்ஜம் நீரின் உப்புத்தன்மை பெய்யும் மழையுடன் தொடர்புடையது.
1950 ஆம் ஆண்டில் ஜம்ஜம் நீரின் உப்புத்தன்மை 4500 மில்லி கிராம் L ̄¹
2015 ஆம் ஆண்டில் ஜம்ஜம் நீரின் உப்புத்தன்மை 500 மில்லி கிராம் L ̄¹
ஜம்ஜம் நீரின் உப்பு மற்றும் காரத்தன்மை அளக்கப்படுகிறது. உடனடி குளோரின் டெஸ்ட் செய்யப்படுகிறது. நீரில் கலந்துள்ள உப்புகளை பகுத்தறியக் கருவி பயன்படுத்தப்படுகிறது. பேக்டீரியாக்களைக் கண்டறிய நுண்ணோக்கி
உபயோகப்படுத்தப்படுகிறது.
உலகச் சுகதார நிறுவனத்தின் வழிகாட்டலும் சௌதி நீர் சுத்திகரிப்பு சார்ந்த தரநிலை அளவியல் அமைப்பின் வழிகாட்டலும் சுத்தமான ஜம்ஜம் நீரின் தரத்திற்கு முக்கிய காரணங்கள் (WHO, SASO (Saudi Standards Metology and Quality Organisation) அபூர்வமான சமயங்களில் ஜம்ஜம் நீரில் அதிகப்படியான ஃபுளோரைடு, கால்சியம் மற்றும் மக்னீசியம் காணப்படுகின்றன.
மஷாத் 2010 அறிக்கை ஜம்ஜம் நீரில் எவ்வித கிருமிகள் வளர்ச்சி கூறுகளும் இல்லை என சான்றுரைக்கிறது.
குடிநீர்த் தரத்தை 5 பிரிவுகளாக நீர் தரக் குறியீடு (WQI) பிரிக்கிறது.
பிரிவு -1 (குடிக்க மிகமிகப் பாதுகாப்பானது) 0-25
பிரிவு – 2 (நல்லது – 26- 50)
பிரிவு - 3 (பரவாயில்லை -51-75)
பிரிவு -4 (மோசமானது – 76- 100)
பிரிவு - 5 (குடிக்க ஆபத்தானது- 100
ஜம்ஜம் நீர் பிரிவு-1ஐ சார்ந்தது.
ஜம்ஜம் நீர் புனிதமானது எனக் கூறிவிட்டு சௌதி அரசாங்கம் சும்மா இருக்கவில்லை. நீரைத் தெளிவான பகுப்பாய்வு செய்துதான் பயன்படுத்துகிறது.
தினம் 16 லட்சம் லிட்டர் நீர் ஜம்ஜம் கிணற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது. தினம் 400 டன் ஜம்ஜம் நீர் மதினா நகரிலுள்ள நபிகள் நாயகம் மஸ்ஜிதுக்கு அனுப்பப்படுகிறது.
எல்லா விமான நிறுவனங்களும் ஹஜ் உம்ரா பயணிகள் தலைக்கு ஐந்து லிட்டர் ஜம்ஜம் நீர் எடுத்துப் போக அனுமதிக்கின்றன.
கம்மிங் பேக் டு தி பாய்ன்ட்.
“இங்க நூல் வெளியிட முன்னனுமதி பெற்றீர்களா?” என்கிற கேள்வி ஆர்னிகாவின் முகத்தைத் தாக்கியது.