இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

29. ஹஜ் புனிதப் பயணம்

முதன்மைப் பயணக் கட்டுரைக்குள் போகும் முன் ஓர் இடைச் செருகல்.

உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மக்கா எனும் ஆன்மிக வேடந்தாங்கலில் பக்திப் பறவைகளாய் வந்து இளைப்பாறுகின்றனர்.

எல்லா முஸ்லிம்களும் நினைத்த மாத்திரத்தில் ஹஜ்ஜுக்குச் சென்று விட முடியாது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட கோட்டா சவூதி அரேபியாவால் வழங்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டிற்கான (ஹிஜ்ரி 1447) ஹஜ் பயணத்திற்கான கோட்டா மற்றும் ஒப்பந்தங்கள் ஏற்கனவே பல நாடுகளுடன் அதிகாரப் பூர்வமாக கையெழுத்தாகி விட்டன.

இந்தக் கோட்டா முறை எவ்வாறு வேலை செய்கிறது?

எந்த நாட்டுக்கு எவ்வளவு வாய்ப்பு என்பதனைப் பார்ப்போம்.

ஒரு நாட்டிற்கு இவ்வளவு இஸ்லாமியர்கள்தான் ஹஜ்ஜுக்கு வர வேண்டும் என்கிற வரையறையை ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு’ (OIC) 1987 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது.

இதன்படி ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு பத்தாயிரம் முஸ்லிம்களுக்கு ஒரு நபர் என்கிற அடிப்படையில் ஹஜ் கோட்டா கணக்கிடப்படும்.

உதாரணமாக ஒரு நாட்டில் ஒரு கோடி முஸ்லிம்கள் இருந்தால் அந்த நாட்டுக்கு ஆயிரம் பேர் என்கிற கோட்டா வழங்கப்படும்.

இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் சௌதி அரேபியா அந்தந்த நாடுகளுடன் மேற்கொள்ளும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (Bilateral Hajj Agreements) மூலமாகவும் சில கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுவதும் உண்டு.


2026 ஏப்ரல் நிலவரப்படி உலக அளவில் அதிக இஸ்லாமியர்களைக் கொண்ட நாடுகளே ஹஜ் கோட்டாவிலும் வழக்கம் போல முன்னிலை வகிக்கின்றன.

இந்தோனேசியா உலகின் அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடு என்பதால் அவர்களுக்குத்தான் ஹஜ் கோட்டாவில் முதலிடம் வழங்கப்படுகிறது.

அதாவது இந்தோனேசியாவுக்கு 2, 21, 000 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இந்தோனேசியாவில் ஹஜ் செல்ல விண்ணப்பித்து விட்டு 11 முதல் 40 ஆண்டுகள் வரை காத்திருப்போர் ஏராளம். ஹஜ் கோட்டா பிரச்சனைகளை இறைமை நிதியங்கள் மூலம் அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.

ஹஜ் கோட்டாவில் பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்.

அவர்களுக்கு 1,79,210 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்தியா 2025 நவம்பர் மாதத்திலேயே சவுதி அரேபியாவுடன் ஜித்தாவில் இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அந்த ஒப்பந்தப்படி 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஹஜ் கோட்டா 1,75,025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்க தேசத்துக்கு 1,27,197 ஹஜ் கோட்டா.

மேற்கத்திய நாடுகளுக்கான பிரிட்டனுக்கு 12, 000.

அமெரிக்காவுக்கு 20, 000

இலங்கைக்கான ஹஜ் பயணத்தை மேலும் ஒழுங்குபடுத்துவதற்கும் முகவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் புதிய ஹஜ் சட்டம் கொண்டு வர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் இலங்கையில் ஒரு நபருக்கான ஹஜ் பேக்கேஜ் செலவு தோராயமாக 19 இலட்சம் மூலம் 25 லட்சம் வரை என கணக்கிப்பட்டுள்ளது.

சௌதி அரேபியா ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் நடைமுறைகளை NUSUK போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் மிகத்துல்லியமாக மாற்றி வருகிறது.

2026 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களை உறுதி செய்வதற்காக, தனியார் முகவர்கள் 2026 ஜனவரி 15 ஆம் நாளுக்குள் அனைத்து முன் பதிவுகளையும் முடிக்க வேண்டும் என கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் கடைசி நேரக் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு ஹாஜிகளுக்கு சிறந்த சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

உலக முஸ்லிம்கள் ஜனத்தொகை 215 கோடி. அவர்களில் ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பை வெறும் 15 முதல் 20 இலட்சம் பேர் மட்டுமே பெறுகின்றனர்.


சரி, ஹஜ் கமிட்டி என்றால் என்ன? அதன் பணி என்ன?

இந்திய ஹஜ் கமிட்டி என்பது சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

இது இந்திய முஸ்லிம்களுக்கான வருடாந்திர ஹஜ் யாத்திரையை நிர்வகிக்கவும் ஒழுங்கமைக்கவும் எளிதாக்கவும் 2002ஆம் ஆண்டின் ஹஜ் குழு சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.

இது மாநில அளவிலான குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு சௌதி அரேபியாவில் பயணம் தங்குமிடம் மற்றும் தளவாடங்களை ஒருங்கிணைக்கிறது.

ஹஜ் கமிட்டியின் பணிகள் மற்றும் பொறுப்புகள்.

* பல்வேறு புறப்படும் இடங்களில் இருந்து விமானப் பயண ஏற்பாடுகள், மக்கா / மதீனாவில் தங்குமிட வசதிகள் மற்றும் பயணிகளுக்கான மருத்துவ வசதிகள் ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறது.

* விண்ணப்ப மேலாண்மை : ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுப் பரிசீலிக்கிறது. விண்ணப்பத்தார்களின் எண்ணிக்கை ஒதுக்கீட்டை மீறினால் ‘குர்ரா’ எனும் குலுக்கல் முறையில் ஹஜ் பயணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உதாரணமாக, 13. 08. 2025ல் ஹஜ் பயணிகளுக்கான டிஜிட்டல் குலுக்கல் நடைபெற்றது. அதில் 30000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 95,336 பேர் காத்திருப்பு பட்டியலுக்குப் போயினர்.

பயணிகளுக்கான ஆதரவு : ஹஜ் வழிகாட்டியை விநியோகித்தல், வழிகாட்டிகளுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் தடுப்பூசி முகாம்களை அமைத்தல். பயிற்சியாளர்கள் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சம்பந்தப்பட்ட மாநில ஹஜ் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பயிற்சியாளர்களுக்கு ஆறு மண்டலங்களிலும் தலா இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதல் ஹஜ் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்திய அரசு 25000 ரூபாய் நிதியுதவி மானியமாகத் தந்தது. இந்த மானியத்தை 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய அரசு ரத்து செய்தது. ஆனாலும் சில மாநிலங்கள் ஹஜ் மானியங்களைத் தொடர்கின்றன. தமிழக அரசு, 2024- 2025 ஆம் நிதியாண்டில் தகுதியுள்ள யாத்திரீகர்களுக்கு 25000 ரூபாய் வழங்க 5650 பயனாளிகளுக்கான பதினான்கே கால் கோடி ரூபாயை ஒதுக்கியது.


ஹஜ் குலுக்கல் நடைபெறும் விதம்

* பதிவு மற்றும் சரிபார்ப்பு : விண்ணப்பத்தார்கள் ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Hajcommitte.gov.in) விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு கவர் எண் (Cover number) வழங்கப்படுகிறது.

* டிஜிட்டல் முறை (ருர்ரா) எண்ணிம தற்செயல் தேர்வு (Digital Random selection) மூலம் ஹஜ் பயணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

* நேரலை ஒளிபரப்பு : இந்தக் குலுக்கல் மும்பையில் உள்ள ஹஜ் ஹவுஸில் நடத்தப்படுகிறது. இது பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

* முடிவுகள் அறிவிப்பு : தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குக் குறுந்தகவல் (S.M.S) மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

* குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களின் பாஸ்போர்ட் மற்றும் முன்பணத்தை சமர்ப்பித்து பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

ஹஜ் விமானங்கள் இந்தியாவின் 21 புறப்படுm இடங்களிலிருந்து புறப்படுகின்றன. உலகs சுகாதார அமைப்பின் விதிமுறைகளின்படி ஹஜ் பயணிகளுக்கு மூளைக்காய்ச்சலுக்கு எதிரான மற்றும் போலியோவுக்கு எதிரான தடுப்பூசியும் போடப்படுகின்றன.

ஹஜ் புனிதப் பயணிகளுக்கான குழு விபத்து இழப்பீட்டு திட்டம் 2004 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டில் ஹஜ்ஜுக்கான கப்பல் பயணம் நிறுத்தப்பட்டது.

ஹஜ் பயணிகளை மக்காவுக்கு அழைத்துச் செல்லும் பணியை ஏர் இந்தியாவும், சௌதி அரேபியன் ஏர்லைன்ஸும் சிறப்பாகச் செய்கின்றன.

ஹஜ் கமிட்டி (மும்பை முகவரி)

பைத்துல் ஹஜ்ஜாஜ், 7.A. எம்ஆர்ஏ மார்க் (பால்டன் சாலை) மும்பை. 400 001. மகாராஷ்டிரா இந்தியா. (022-22 71 71 100/ 101/ 102 , 022 -22620920 / 22630461

Ceo/hajcommittee@nic.in (திங்கள் - வெள்ளி 10-6 )

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p29.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License