இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

30. மக்காவில் பார்க்க வேண்டிய இடங்கள்

முதல் உம்ரா முடித்த பின் அறைக்கு திரும்பினோம்.

“ஆர்னிகா! நாம் மெக்கா மதினாவில் இருக்கப் போவது ஐந்து நாட்கள் தான். முதல் உம்ரா நிறைவேற்றிவிட்டோம். அடுத்து என்ன?”

“இன்னும் இரண்டு உம்ராக்கள் நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது உம்ரா மகள் குடும்பத்திற்காக. மூன்றாவது மகன் குடும்பத்திற்காக!”

“முடியுமா உங்களால்? ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? நாம் ஒரு தடவை சரவணபெலகோலா போனோம். நீங்கள் படியேற முடியாமல் மலையின் அடிவாரத்திலேயே தங்கி விட்டீர்கள். நான்தான் மலை உச்சி வரை போய் வந்தேன்!”

“செல்லம். அது சுற்றுலா. இது ஆன்மிகப் பயணம். ஆயுளில் ஒரு தடவை. முடிந்தவரை செயல்படுவோமே?”

“நாளை நமக்கு இரண்டாவது உம்ரா!’

“சரி!”

“நாளை நாம் மக்காவிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆயிஷா மஸ்ஜித்துக்கு போகிறோம். அங்கு இரண்டு ரக்காத் தொழுதுவிட்டு புது இஹ்ராம் அணிகிறோம்…”

“அந்தப் பள்ளியின் முக்கியத்துவம் என்ன?”

“நபிகள் நாயகம் தனது மனைவி ஆயிஷா அம்மையாரை இங்குதான் இஹ்ராம் பூணச் செய்தார். மக்காவில் ஏற்கனவே உம்ரா நிறைவேற்றியவர்கள், இரண்டாவது உம்ராவுக்கான இஹ்ராம் இங்கு அணியலாம். இப்பள்ளி ஒரு மீகாத் மையம்!”

“மீகாத் என்றால் என்ன என்று கொஞ்சம் விவரியேன்!”

“மீகாத் என்பது நியமிக்கப்பட்ட இடம் அல்லது நேரம் என பொருள்படும். இஸ்லாத்தில் மீகாத் நிர்ணயிக்கப்பட்ட ஒரு புவியியல் எல்லையாகும். ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பும் யாத்ரீகர்கள் மக்காவை நோக்கிச் செல்வதற்கு முன்பு மீகாத் எல்லைக்குள் நிய்யத் செய்து இஹ்ராம் அணிய வேண்டும்.


ஐந்து மீகாத் இடங்கள் உள்ளன. அவை;

1. மதீனாவிலிருந்து வருவபர்களுக்கான மீகாத் - துல் ஹுலைபா.

2. சிரியா, எகிப்து, வடஆப்பிரிக்கா பயணிகளுக்கான மீகாத் - அல் ஜுஹ்பா.

3. மத்தியப் பகுதி அல்லது நஜ்தில் இருந்து வரும் பயணிகளுக்கான மீகாத் - கர்ன் அல் மனாசில்.

4. ஏமன் மற்றும் தெற்கிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்கான மீகாத்- யவம்லாம்.

5. ஈராக் மற்றும் கிழக்கத்திய நாடுகளிலிருந்து வரும் யாத்திரீகர்களுக்கான மீகாத் - தர்த் இர்க்...”

“ஓஹோ!”

“இஹ்ராம் நிலையில் இல்லாமல் இந்த இடங்களைக் கடப்பது ஒரு கடுமையான மீறல் ஆகும். இதற்குத் தண்டனை உண்டு. பெரும்பாலும் அந்தத் தண்டனை ஒரு ஆட்டைப் பலியிடுவதாய் அமையும்!”

“நாம் எந்த விதிகளையும் மீறாமல் கவனமாய் இருப்போம்!”

இருவரும் நான்கு நான்கு பிரட் துண்டுகள் சாப்பிட்டோம்.

காபி தயாரித்துக் குடித்தோம்.


மறுநாள் அதிகாலை. ஒரு டாக்ஸி பிடித்து ஆயிஷா பள்ளிக்குப் போனோம். இரண்டு ரக்காத் தொழுதோம். புது இஹ்ராம் அணிந்தோம்.

மீண்டும் மஸ்ஜித் அல் ஹரத்திற்கு வந்து சேர்ந்தோம். இரண்டாவது உம்ராவை ஆரம்பித்தோம். தவாப் செய்தோம்.

ஸயீ செய்தோம். மீண்டும் மொட்டை அடித்த தலையில் மொட்டை அடித்துக் கொண்டேன் (தஹலூல்) மக்காவிற்கு அருகிலுள்ள மூன்று மீகாத் மையங்கள்

1. ஆயிஷா மசூதி

2. ஜுரானா மசூதி

3. ஹுதைபியா மசூதி

மதிய ஓய்வுக்குபின் மீண்டும் ஆயிஷா பள்ளிக்கு போய் மூன்றாவதாக இஹ்ராம் அணிந்தோம். தவாப்- சயீ- தலை மழித்தல்.

மூன்று உம்ராக்கள் முடித்த திருப்தியுடன் பயணக் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும் காரில் மதீனா புறப்பட்டோம். மதீனாவில் பல திடுக்கிடும் விஷயங்கள் காத்திருந்தன.


நேரமின்மை காரணமாக நாங்கள் மக்காவில் பார்க்காத இடங்கள்

1. மக்காவின் ஓம் அல் ஜௌத் மாவட்டத்தில் கிங் அப்துல் அஜீஸ் வளாகம் காபாவை போர்த்தும் துணியான கிஸ்வாவை உற்பத்தி செய்கிறது. 1977 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை தங்கம், வெள்ளி நூல்களைப் பயன்படுத்தி 850 கிலோ எடையுள்ள கை மற்றும் இயந்திரங்களால் எம்ராய்டரி செய்யப்பட்ட கருப்புப் பட்டுத் துணியை உருவாக்குகிறது. ஹஜ்ஜின் போது ஆண்டுதோறும் மாற்றப்படும் 47 துண்டுகள் கொண்ட இந்தத் துணித் தொகுப்பைத் தயாரிக்க ஆறிலிருந்து எட்டு மாதங்கள் ஆகும். சாயமிடுதல், நெசவு, கைத்தையல் மற்றும் இயந்திரத் தையல் இங்கு நடக்கிறது. பார்வையாளர்கள் இணைய வழியில் முன்பதிவு செய்ய வேண்டும். கிஸ்வா துணியின் மீது குர்ஆன் வசனங்கள் அச்சிடப்படுகின்றன. பார்வை நேரம் காலை 8 -காலை முதல் 11 மணி வரை. இந்த தொழிற்சாலை ஹரத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் இருக்கிறது.

2. ஜபல் அல் நூர் எனப்படும் ஹிராகுகை. சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் பகுதியில் மக்காவிற்கு அருகில் ஜபல்-அல்-நூர் எனப்படும் ஒளிமலை உச்சியில் அமைந்துள்ளது. மக்காவிலிருந்து 3 அல்லது 4 கிலோ மீட்டர் தூரம். உயரம் 2100 அடிகள். உச்சிக்கு ஏற1750 படிகள். நபிகள் நாயகம் இறைவனிடமிருந்து முதல் வஹி எனும் இறைச் செய்தியைப் பெற்ற இடம் இது. வழிகாட்டிப் பலகைகள், ஓய்விடங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வசதிகள் நிறைந்த பாதை வழியாக ஹிரா குகையை நாம் தரிசிக்கலாம். நுழைவுக்கட்டணம் கிடையாது.

3. ஜபல் தவ்ர் மலை என்பது சவுதி அரேபியாவில் மக்காவிற்குத் தெற்கே அமைந்துள்ளது. உயரம் 760 மீட்டர். குரைஷியர்களிடமிருந்து தப்பித்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த போது நபிகள் நாயகமும் நபிதோழர் அபூபக்கரும் மூன்று இரவுகள் தஞ்சம் புகுந்த குகை இது. குகைக்குள் யாரும் இல்லாதது போல காட்ட ஒரு சிலந்தி வலை பின்னியது. ஒரு புறாமுட்டை இட்டது. இந்தக் குகையைப் பார்க்க இரண்டு மணி நேரம் நாம் மலையேற வேண்டும். குளிர்ச்சியான நேரங்களில் மலையேறுவது நல்லது. மலையுச்சியில் ஒரு சிற்றுண்டிக் கடை உள்ளது. நுழைவுக்கட்டணம் கிடையாது. Book my booking மூலம் வழிகாட்டி சுற்றுலாவில் மலை ஏறுவது சிறப்பு.

4. ஜன்னத்துல் முஅல்லா (அல் ஹஜுன்) சவுதி அரேபியாவின் மக்காவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கப் புனிதமான கல்லறைத் தோட்டமாகும். இது மஸ்ஜித் அல் ஹரமுக்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்குதான் நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜா அம்மையார், நபிகள் நாயகத்தின் தாத்தா அப்துல் முத்தலிப் மற்றும் நபிகள் நாயகத்தின் மாமா அபூதாலிப் அடங்கியுள்ளனர். இந்தக் கல்லறைத் தோட்டம் வருடம் முழுக்கத் திறந்திருக்கும். பல நபி தோழர்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். எந்தக் கல்லறையிலும் அடையாளக் குறியீடுகள் ஏதும் இல்லை. ஜின்கள் மசூதிக்கு அருகில் இந்தக் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ளது. மஸ்ஜித் அல் ஹரத்திலிருந்து 15 நிமிட நடைதூரம் தான். நுழைவுக்கட்டணம் இல்லை. முன்னர் இங்கு 75 குவிமாடக் கல்லறைகள் இருந்தன.


5. ஜின்களின மசூதி (மஸ்ஜித் அல்-ஜின்) சவுதி அரேபியாவின் மக்காவில் ஜன்னத்துல் முஅல்லா மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள மசூதி ஆகும். நபிகள் நாயகம் குர்ஆனை ஓதுவதைக் கேட்க ஜின்களின் ஒரு குழு கூடி இஸ்லாத்தைத் தழுவிய இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. மஸ்ஜித் அல்-ஹராஸ் எனவும் இந்த மசூதி அழைக்கப்படுகிறது. மஸ்ஜித்-அல் -பயா (விசுவாச பிரமாணத்தின் மசூதி) என்கிற பெயரும் உண்டு. இந்த மசூதி ஹிஜ்ரி 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது. முகவரி : 8464, அல் மஸ்ஜித் அல்ஹரம் சாலை, அஸ் சுலைமானியா, மக்கா 24231.

6. மவுன்ட் அராபத் (இரக்கத்தின் சிகரம்) 70 மீட்டர் உயர கிரானைட் மலை இது. வருடாந்திர ஹஜ் யாத்திரையின் மையப்புள்ளி ஆகும். இங்கு துல் ஹிஜ்ஜா மாதத்தின் ஒன்பதாவது நாளில் (அராபத் தினம்) யாத்ரீகர்கள் தங்கள் ஹஜ்ஜை நிறைவு செய்வதற்காக பிற்பகல் தொழுகையிலும் மனம் திரும்பலிலும் கழிப்பர். நபிகள் நாயகத்தின் இறுதி பேருரை இங்குதான்.

7. மினா கூடாரநகரம் மக்காவிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம். ஆண்டுதோறும் ஹஜ் பயணத்தின் போது 20 இலட்சம் யாத்ரீகர்கள் தங்கும் குளிரூட்டப்பட்ட கூடார வளாகமாகும். தீயைத் தாங்கக்கூடிய டெப்லான் பூசப்பட்ட கண்ணாடியிழை கூடாரங்கள் கொண்ட நகரம் இது. சைத்தானின் மீது கல்லெறியும் சடங்கின் மையம் இதுதான்.

8. ஜித்தாவில் உள்ள மன்னர் பஹத் நீரூற்று : மெக்காவிலிருந்து 65 கிலோ மீட்டர் தூரம். இந்த நீரூற்று தினமும் சூரிய அஸ்தமனத்தின் போது செயல்படுகிறது. பயண நேரம் காரில் அல்லது ரயிலில் ஒரு மணி நேரம். உலகின் உயரமான நீரூற்று இது. செங்கடல் உவர்நீரை 1024 அடி உயரத்திற்கு பீய்ச்சுகிறது. வேகம் மணிக்கு 375 கிலோ மீட்டர்.

9. மஸ்ஜித் அல் கைப் என்பது மக்காவிற்கு அருகில் மினாவின் தெற்கு அடிவாரத்தில் அமைந்துள்ள மசூதி. இதனை நபிகளின் மசூதி என்பர். நபிகள் நாயகம் உட்பட 70 நபிமார்கள் இங்கு தொழுகை நடத்தியதாக நம்பப்படுகிறது. ஒரே நேரத்தில் இங்கு 50 ஆயிரம் பேர் தொழலாம்.

10. தோர் மலை.

11. புனிதகுர்ஆன் அருங்காட்சியகம்

12. மஸ்ஜித் அல் நிம்ரா.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p30.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License