இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

35. எகிப்து சுற்றுலா


மெக்காவிற்கு அனுமதிக்கப்படாத டாக்ஸி பயணம்!

நடந்ததை ரீவைன்ட் பண்ணிப் பார்த்தோம்.

ஜெத்தாவில் இறங்கினோம்.

ரயில் பயணத்தைத் தவிர்த்து, பேருந்துப் பயணத்திற்கு வருகிறோம்.

எங்கள் பாஸ்போர்ட்டை வாங்கி எங்கள் பெயர்களை குறித்துக் கொண்டு காத்திருக்கச் சொல்கின்றனர்.

காத்திருக்கிறோம்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பெண் பயண ஏற்பாட்டாளர். “நீங்கள் பேருந்தில் போய் சிரமப்பட வேண்டாம். மூத்தக் குடிமக்களுக்கு இலவச டாக்ஸி பயணம் இருக்கிறது. அதில் போங்கள்!” என்கிறார்.

ஆர்னிகா 20 முறை அது முறையான இலவச பயணம்தான் என்பதனை உறுதி செய்கிறார். டாக்ஸியில் மெக்கா போனோம்.

இப்போது அது பூதமாய்க் கிளம்பி நிற்கிறது.

பத்தாயிரம் அபராதம் உண்மையா, அக்பர் ட்ராவல் ஏஜென்ஸியின் சுரண்டல் பொய்யா?

மகளுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டோம்.


“அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வஅலைக்கும ஸலாம்!”

‘இப்படி ஒரு அபராதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அபராதம் அறிவித்து சவூதி அரசு ஒரு கடிதம் அனுப்பியிருக்கும் அல்லவா? அதனை அனுப்புங்கள். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்!’

அதற்குள் அக்பர் ட்ராவல் ஏஜென்ஸியிடமிருந்து பத்து நினைவூட்டல்கள்.

‘சௌதி அரசாங்கத்தின் ஓலையை அனுப்புங்கள்’

‘உங்கள் ஆராய்ச்சியை எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். பணத்தை உடனடியாக அனுப்புவது உங்கள் எகிப்து டூருக்கு நல்லது. இனிமேலாவது கவனமாக இருங்கள். இலவசம் என்றால் போய் பாய்ந்து மாட்டிக் கொள்ளாதீர்கள்’

ஆர்னிகா இடுங்கிய கண்களுடன் யோசித்தார்.

“ரிஸ்க் எடுக்க வேண்டாம் வகிதா. நமக்கு எகிப்து பயணம் முக்கியம். அத்துடன் பயணங்களைப் பத்திரமாக முடித்து ஊர் திரும்ப வேண்டும். 10, 000 கட்டி விடுவோம்!”

“பணத்தை எப்படி அனுப்புவீர்கள்?”

ஜிபே வொர்க் பண்ணுகிறதா என செக் பண்ணினார் ஆர்னிகா.

பத்தாயிரம் ரூபாய் ஜிபே பண்ணி ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்டார் ஆர்னிகா.


மூன்று நாடுகள் டூர் முடித்து இத்தனை நாளாகியும் எங்களுக்கு பத்தாயிரம் கட்டினது - சௌதி அரசின் அபராதமா அல்லது மூத்த குடிமக்களை ஏமாற்றிய ஆன்லைன் மோசடியா எனத் தெரியாது.

3170. ரெய்ஹானத் அல் ஜெஸிரா, அல் பைசில்யா மாவட்டம் ஜெத்தா 23442 முகவரியில் இருக்கும் அல் தெய்பாட் அருங்காட்சியகத்திற்குள் பிரவேசித்தோம்.

கிபி1999ல் இந்த அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது.

நான்கு மாடிக்கட்டிடம்.

365 அறைகள்.

அறைகளில் பழைமையான மண்பாண்டப் பொருட்கள், நாணயங்கள், பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள், பழைய வரைபடங்கள், சௌதி பாரம்பரிய ஆடைகள் மற்றும் ஆயுதங்கள் நிறைந்திருந்தன.

பாரம்பரிய ஹிஜாஸி கட்டிடக்கலையைப் பற்றியக் காட்சிப் பொருட்களும் இருந்தன.

மொத்தம் 60000 கலை பொருட்கள்.

ஏறக்குறைய நான்கு மணி நேரம் அந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தோம். தலைக்கு ரூபாய் 2400 கட்டணம் செரித்தது.

அறைக்குத் திரும்பினோம்.



மாலை 3.30 மணிக்கு டாக்ஸி பிடித்து ஜெத்தா விமான நிலையம் பறந்தோம். டாக்ஸியை ஓட்டியது ஒரு இலங்கைத் தமிழர்.

“இலங்கைக்கு டூர் வாருங்கள். எங்கள் வீட்டில் தங்கி ஊர் சுற்றலாம்!” என்றார்.

மிக மகிழ்ந்தோம்.

ஜெத்தா விமான நிலையத்தில் பாஸ்போர்ட் காட்டி ஐந்து லிட்டர் ஜம்ஜம் நீர் விலைக்கு வாங்கிக் கொண்டோம்.

டெர்மினல் ‘என்’னில் ஜெத்தாவிலிருந்து கெய்ரோ செல்லும் ஏர் கெய்ரோ எஸ். எம் 480 நின்றிருந்தது.

விமானம் ஏறினோம்.

வெறும் ஒண்ணேகால் மணி நேரப் பயணம்.

ஆர்னிகாவிற்கு எகிப்து என்றாலே தனி மயக்கம்தான். ‘முற்பிறவி என்று ஒன்று இருந்திருந்தால் நான் ஒரு எகிப்தியனாக பிறந்திருப்பேன்’ எனக் கூறுவார் ஆர்னிகா.

எகிப்து சுற்றுலா ஐந்து நாட்கள் என வடிவமைத்திருந்தோம்.

ஒரிஜினல் திட்டத்தில் லக்ஸார் ஒருநாள் சுற்றுலா இருந்தது.

ஆனால் நாட்கள் குறைவு என்பதாலும் போக்குவரத்து சிரமங்கள் அதிகம் என்பதாலும் லக்ஸார் சுற்றுலாவை நிகழ்ச்சி நிரலிருந்து நீக்கினார் ஆர்னிகா.

மொத்தம் எகிப்தில் பார்க்க வேண்டிய இடம் 32 என குறித்தார் ஆர்னிகா.

எகிப்தில் நாங்கள் இருக்கப் போவது ஐந்து நாட்கள்.

28.01.2025 இரவு 10 மணிக்கு ஹோட்டலுக்கு போய் தங்குதல்.

(அப்னான் கெய்ரோ ஏர்போர்ட், கெய்ரோ கவர்னரேட் 4473006)

29.01.2025- ஆறு இடங்கள் பார்த்தால்

* கிஸா பிரமாண்ட பிரமிட்

* காஃப்ரே பிரமிடு

* மென்கர் பிரமிடு

* ஸ்பின்க்ஸ்

* மெம்பிஸ்

* சாக்குரா

30.01.2025 - ஆறு இடங்கள் பார்த்தல் (அலெக்ஸான்ட்ரியா)

* பிபிலிகா புதிய நூலகம்

* பாம்பே தூண்

* ரோமன் ஆம்பி தியேட்டர்

* கைட்பே கோட்டை

* அபு அல் அப்பாஸ் அல் முர்ஸி மசூதி

* ராயல் ஜுவல்லரி

* மான்டஸா தோட்டம், அரண்மனை

* ரோமன் தியேட்டர் மற்றும் அருங்காட்சியகம்

* கோம் அல் சோகபா கல்லறை

31.01.2005 வெள்ளிக்கிழமை ஆறு இடங்கள்

* கிராண்ட் எஜிப்திசியன் அருங்காட்சியகம்

* ஓபேரா ஹவுஸ்

* காப்டிக் கெய்ரோ அருங்காட்சியகம்

* பாயில் அல் சுகாமி அருங்காட்சியகம்

* எகிப்திய நாகரீகம் பற்றிய தேசிய அருங்காட்சியகம்

* கான் அல் கலிலி சந்தை

01.02.2025 சனிக்கிழமை ஆறு இடங்கள்

* இஸ்லாமியக் கலை வடிவங்களின் அருங்காட்சியகம்

* அப்தீன் அரண்மனை அருங்காட்சியகம்

* குகை தேவாலயம்

* மானியல் அரண்மனை

* காயர் ஆன்டர்ஸன் அருங்காட்சியகம்

* நைல் நதி கப்பல் பயணம் (நடனம் மற்றும் விருந்து)

02.02.2025 ஞாயிற்றுக்கிழமை ஆறு இடங்கள்

* சுல்தான் ஹசன் மசூதி மற்றும் மதரஸா

* கெய்ரோ சிட்டாடல்

* அபு துலன் மசூதி

* அல் ஹக்கீம் மசூதி

* அல் அச்சார் மசூதி

* மூஸ் தெரு

எங்கள் மகள் ஜாஸ்மின் ஏறக்குறைய 32 இடங்களை ஐந்து நாட்களில் பார்ப்பது போலப் பிரித்து, எங்கள் பாஸ்போர்ட் பெயர்களில் டாலர்களில் பணம் கட்டி டிக்கெட் எடுத்து பிடிஎப் அனுப்பி இருந்தாள்.

“இது பேராசை அப்பா. ஐந்து நாட்களில் 32 இடங்கள். இம்பாஸிபிள். டிக்கெட் எடுத்த பணம் வீணாகப் போகிறது. அத்துடன் டென்ஷன் டென்ஷன் டென்ஷன்…”

விமானம் கெய்ரோ விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் இறங்கியது.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p35.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License