இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

38. எகிப்து நூலகம்


நூலகத்தின் பல்வேறு அரங்குகளில் இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

நுழைவுச்சீட்டு தரும் அறையில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவரிடம் ஆர்னிகா முறையிட்டார்.

“நாங்கள் கணவன் மனைவி மூத்த குடிமக்கள். இந்தியாவில் இருந்து வருகிறோம். நாங்கள் எழுத்தாளர்களும் கூட. எழுத்தாளர்களுக்குக் கோவில் நூலகம் தானே? ஆன்லைனில் எங்களுக்கு நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை. தாங்கள் தயவு செய்து எங்களுக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்குங்கள்!”

கவுன்ட்டரில் அமர்ந்திருந்தவர் முறுவலித்தார்.

“உங்க பெயர் என்ன?”

“ஆர்னிகா நாசர்”

“உங்க மனைவியின் பெயர் என்ன?”

“அலிமா என்கிற வகிதாநாசர்…”

தலைக்கு 150 எகிப்தியன் பவுண்டுகள் வீதம் இருவருக்கும் 300 எகிப்தியன் பவுண்டுகள் வாங்கிக்கொண்டு நுழைவுச்சீட்டுகள் கொடுத்தார்.

பார்வையாளர் நேரம் காலை 10 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை.

நாங்கள் அலெக்சான்டரியா நூலகத்திற்குள் நுழைந்த நேரம் மாலை நான்கு மணி.

பண்டைய அலெக்சான்டரியா நூலகம் கிமு 331ல் கிரேக்க அறிஞர் பாவெரமின் டெமட்ரியஸ் உதவியுடன் தாலமி வம்சத்தால் தொடங்கப்பட்டது.

திறந்து வைத்தவர் முதலாம் தாலமி சோடார் அல்லது அவரது மகன் இரண்டாம் தாலமி பிலடெல்பஸ்.


நூலகம் திறக்கப்பட்ட இடம் அலெக்சான்ட்ரியாவின் அரசப்பகுதி. அங்கே கலைகளின் தெய்வங்களான மியூஸ்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் மற்றும் ஆராய்ச்சி மையம் இருந்தன. அந்த நூலகத்தின் நூறாயிரக்கணக்கான பாப்பிரஸ் சுருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நூலகத்தைக் கலைத் தேவதைகளின் ஆலயம் (மியூசியன்) என்றனர். பிப்லியோதேகே (புத்தகத்தொகுப்பு) என்றும் அழைத்தனர்.

நூலகத்தின் லத்தீன் பெயர் அலெக்சான்ட்ரினா பிப்லியோதெஸ்.

புதிய நவீன் பிப்லியோதேகா அலெக்சான்டரினா 2002-ல் திறக்கப்பட்டது. (16.10. 2002) 1970 களின் நடுப்பகுதியில் கருத்தாக்கம் செய்யப்பட்டு யுனெஸ்கோவின் ஆதரவுடன் நார்வேஜிய நிறுவனமான ஸ்னோ ஹெட்டாவால் வடிவமைக்கப்பட்ட இந்த 220 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிலான வளாகம் பெருமைக்குரியது. ஒரு பிரமாண்டமான சாய்ந்த தட்டின் வடிவமைப்பைக் கொண்டது இந்த நவீன நூலகம்.

1972 கிழக்குத்துறைமுகத்தில் உள்ள பழமையான நூலகத்தை புனரமைக்கும் திட்டம் அலெக்சான்ட்ரியா பல்கலைக்கழகத்தால் முன்மொழியப்பட்டது.

1988 - 1989 யுனெஸ்கோவும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமும் ஒரு உலகளாவியக் கட்டடக்கலைப் போட்டி தொடங்க உதவின. வெற்றி பெற்ற வடிவமைப்பு மத்தியத் தரைக்கடலை நோக்கிச் சாய்ந்திருக்கும் ஒரு சூரிய வட்டத்தைப் போலக் காட்சி அளிக்கிறது. இது நீரிலிருந்து உதித்து உலகை ஒளிரச் செய்யும் இரண்டாவது சூரியனைச் சின்னமாகக் குறிக்கும்.


நூலகத்தின் வெளிப்புறச் சுவர்களில் அஸ்வான் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதில் வரலாற்று மற்றும் நவீன எழுத்து முறைகளின் எழுத்துக்களும் அகர வரிசைகளும் செதுக்கப்பட்டுள்ளன.

1995ல் எகிப்திய அரசாங்கம் வழங்கிய நான்கு ஹெக்டேர் நிலத்தில் அடிக்கல் நாட்டுதல் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடங்கின. முதன்மையான வாசிப்பு அறை - 11 அடுக்குத்தளங்களில் 20, 000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது வரலாற்று ரீதியாக உலகின் மிகப்பெரிய திறந்தவெளி வாசிப்பு இடங்களில் ஒன்றாகும்.

இந்த நூலகத்தில் 80 லட்சம் புத்தகம் உள்ளன. இந்த நூலகத்தில் நான்கு அருங்காட்சியங்கள், ஒரு கோளரங்கம், கையெழுத்துப் பிரதி மறு சீரமைப்பு ஆய்வகங்கள், பார்வையற்றோர் இளைஞர்கள் மற்றும் வரைபடங்களுக்கான சிறப்பு நூலகங்கள் மேலும் இணைய ஆவணக்காப்பகத்தின் எண்ணிமப்பிரதிகளும் உள்ளன.

நூலகத்தின் 80 லட்சம் புத்தகங்களில் அரபு, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் பிரம்மாண்டமான பன்மொழித் தொகுப்புகள் உள்ளன. இங்கு அரிய அச்சு புத்தகக்கண்காட்சி நடக்கின்றன.

பிரான்ஸ் தேசிய நூலகம் அலெக்சான்ட்ரியாவின் நவீன நூலகத்திற்கு ஐந்து லட்சம் தொகுதிகளை பரிசளித்துள்ளது.

பழைய மற்றும் புதிய அலெக்சான்ரியா நூலகங்களைப் பற்றிக் கீழ்க்கண்ட புத்தகங்கள் விலாவாரியாக விளக்குகின்றன.

* ராய் மெக்லியோட் எழுதிய அலெக்சான்ட்ரியா நூலகம் பண்டைய உலகின் கற்றல் மையம்.

* லூசியானோ கான்போராவின் மறைந்து போன நூலகம்.

* முஸ்தபா எல் அப்பாடி எழுதிய பண்டைய அலெக்சான்ட்ரியா நூலகத்தின் வாழ்வும் விதியும்.

புதிய அலெக்சான்ட்ரியா நூலகக் கட்டடத்தை ஆஸ்திரிய கட்டடக்கலைஞர் கிறிஸ்டோப் கபெல்லர் மற்றும் உள்ளூர் கூட்டாளியான ஹம்சா அஸோஸியேட்ஸும் கட்டினர்.

32 மீட்டர் உயரமுள்ள பிரமாண்டமான கண்ணாடிக் கூரையின் கீழ் 11 அடுக்குகளில் 20, 000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது இந்த நூலகம்.

15 நிரந்தர சேகரிப்புகளையும் சுழற்சி முறையில் காட்சி படுத்துவதற்காக நான்கு கலை இடங்களையும் கொண்டுள்ளது நூலகம்.

2001 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணை எண் 76ன் கீழ் நிர்வகிக்கப்படும் பிப்லியோதேகா அலெக்சான்டிரினா புரவலர் மன்றம் அறங்காவலர் குழு (15 முதல் 30 உறுப்பினர்களைக் கொண்டது) மற்றும் ஒரு இயக்குநர் ஆகியோரால் ஆளுமை செய்யப்படுகிறது.


இந்த நிர்வாகக்குழு நிர்வாகத் தலைமை, உள்ளகச் செயல்பாடுகள், சிறப்பு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கலாசார வளாகங்களை கையாள்கின்றது.

இந்த நூலகத்தை நாள்தோறும் 2500 மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். வருடத்திற்கு 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்கிறது இந்த நூலகம்.

இந்த நூலகத்திற்கு வர விரும்பும் மாணவர்கள் தங்களது சமீபத்திய ஒளிப்படம் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு மற்றும் பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றுடன் வந்து தங்களை உறுப்பினர் மேஜையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முதன்மையான வாசிப்புப் பகுதியில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

எகிப்திய மாணவர்களுக்கு மாதாந்திர தள்ளுபடி கட்டணம் 50 எகிப்தியன் பவுண்டுகள். வருடாந்திர மாணவர் உறுப்பினர் சந்தா 150 எகிப்தியன் பவுண்டுகள்.

பிரம்மாண்டமான அலெக்சான்டரியா நவீன நூலகத்தை அண்ணாந்து பார்த்தார் ஆர்னிகா.

அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது.

“80 லட்சம் புத்தகங்கள் அடங்கிய ஒரு புத்தகக்கடலுக்கு வந்திருக்கிறோம். இங்கு இல்லாத தலைப்புகளே கிடையாது. உலகின் அனைத்து அறிவு சார்ந்த எழுத்துக்களும் இங்கு உள்ளன!”

“ஆமாம்!”

“இதனை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?”

“மலைப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. எனக்கு!”

“எனக்கொரு ஆசை வகிதா!”

“என்ன?”


“இங்கிருக்கும் லட்சக்கணக்கான புத்தகங்களைக் கொட்டி அதில் நான் விழுந்து புரள வேண்டும். புத்தகங்களின் மீதிருத்து வரும் அபூர்வ வாசனையை நுகர்ந்து பார்க்க வேண்டும். இங்கேயே மீதி வாழ்நாள் முழுக்க இருந்து தினம் 8 மணி நேரம் படிக்க வேண்டும். எட்டு மணி நேரம் எழுத வேண்டும் 8 மணி நேரம் தூங்க வேண்டும்!”

சிரித்தேன் நான்.

“வாய்யா என் எக்ஸென்ட்ரிக் புருஷா.. எமோஷனைக் கொஞ்சம் குறை…. எழுத்துதான் உன் பலம் எழுத்துதான் உன் பலவீனமும் கூட”

“ஒரு விஷயம் செய்ய மறந்துவிட்டோம்!”

“என்ன?”

“என்னுடைய புத்தகங்களில் பெஸ்ட் தொகுப்புகள் 25ஐ கொண்டு வந்து இந்த நூலகத்திற்கு பரிசளித்திருக்க வேண்டும் நாம்!”

“தமிழ் புத்தகங்களை பரிசாக வாங்குவார்களா?”

“ஏன் வாங்க மாட்டார்கள்? தமிழ் உலக மொழிகளின் தாய்… தமிழ் மகத்துவமானது தனித்துவமானது!”

தலையாட்டினேன். “சரி, வந்த வேலையை பார்ப்போமா?”

இருவரும் உள்ளே போனோம்.

சிந்து பைரவியில் சிவக்குமார் ‘தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’ பாடுவது போல ‘புத்தகங்களைத் தேடி வந்த புத்தகப் புழு நான்’ என பாடினார் ஆர்னிகா.

அடுக்குகளில் இருந்தப் புத்தகங்களை எடுத்து தலைப்புகளை வாசித்தார். பக்கங்களை டபடபவென விரித்து வருடினார்.

ஒவ்வொரு புத்தக அடுக்குகளின் மீதும் சாய்ந்தார் ஆர்னிகா. “என்னைத் தாலாட்ட வருவாயா புத்தகமே… நெஞ்சில் பூ மஞ்சள் தருவாயா புத்தகமே…. தங்க தேரோட்டம் தருவாயா புத்தகமே… இல்லை ஏமாற்றம் தருவாயா புத்தகமே…” பாடினார்.


புத்தகங்களில் சில..

ஷேக்ஸ்பியரின் தொகுக்கப்பட்ட நாடகங்களின் 1623ல் அச்சிடப்பட்ட ஓர் அரிய பதிப்பு.

19 ஆம் நூற்றாண்டின் நெப்போலியனின் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட எகிப்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய பிரம்மாண்டமான படங்களுடன் கூடிய ஆய்வு நூல்.

எகிப்திய பார்வையற்ற எழுத்தாளர் தாஹா ஹுசைனின் சேகரிப்புகள்.

ஐரோப்பிய அச்சுக்கலையின் தொடக்கக்காலத்தை சேர்ந்த அரிய அச்சிடப்பட்ட நூல்கள்.

நேர்த்தியான சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய இஸ்லாமிய காப்டிக் கையெழுத்து பிரதிகளின் தொகுப்பு.

ஏஸ்கிலஸ், சோ போக்கிள்ஸ், யூரிபிடிஸ் மற்றும் கிரேக்க துன்பியல் நாடக ஆசிரியர்களின் படைப்புகள்.

யூக்ளிட் மற்றும் ஆர்க்கிமிடிஸின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள்.

கல்லிமாக்கஸின் பினாகேஸ் எனப்படும் பிரமாண்ட பட்டியல்.

ரோட்ஸ் நகரத்து அப்போலோனியஸ் எழுதிய அர்கோனாட்டிகா


எபிரேய வேதாகமத்தின் வரலாற்று சிறப்புமிக்க கிரேக்க மொழிபெயர்ப்பு

ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி பதிப்புகள்.

மறைந்து போன நூலகம் தொகுப்பு

குறிப்புகள் எடுக்கும் மாணவர்கள் அருகில் போய் அமர்ந்து மானசீகத்தில் ஆர்னிகாவும் ஒரு மாணவரானார்.

அவிழ்த்து விடப்பட்ட கன்னுக்குட்டி தாய்ப்பசுவின் காம்புகளில் முட்டிமுட்டி பால் குடிப்பது போல புத்தகங்களின் சாறை உள்ளடக்கத்தை அள்ளி அள்ளிப் பருகினார் ஆர்னிகா.

அவரை தரதரவென காருக்கு இழுத்து வந்தேன். கார் மீண்டும் கெய்ரோவை நோக்கிப் பறந்தது

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p38.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License