மார்கழிக் கோலங்கள் - 18
மார்கழிக் கவின்சேர் வண்ணக்கோலம்
தேர்செல் வீதி கொண்ட ஞானம்
மார்பு கொண்ட மாதுவின் தியானம்
பார்மேல் உள்ள கண்ணின் மோகமே.
பனித்துளி உவகை மார்கழி நிறங்களே
இனிக்குளிர் கலாபக் கோலம் சேருமே
தனித்து வாசல் கர்வம் கொள்ளுமே
கனிபோல் காரிகை கரங்கள் வரமே
அஞ்சாப் பெண்ணின் ஆருயிர் தவங்கள்
தஞ்சம் கற்பனைக் களஞ்சிய விழிகள்
பஞ்ச வர்ண தத்தைத் தேகம்
நெஞ்சு நெய்திடும் மதுர கோலமே.
திண்ணும் கார்மழை எழில்காண் கோலம்
மண்ணின் மார்பில் வைத்திடும் மகுடம்
விண்ணை நோக்கிடும் தவழ்ந்திடாக் குழந்தை
வண்ண வானவில் நிழல், இசை உருவமெ.
போதும் என்று சொல்ல வில்லை
மாது போடும் வண்ணச் சாதம்
தீது இல்லா தெய்வ சித்திரம்
இதுபண் பாட்டின் கண்ணிலே நரம்பிலே
பல்லும் ஆடும் மார்கழிப் பனியில்
சொல்போல் தேன்தமிழ் வளமும் கொண்ட
சொல்போல் கோலம் நீண்டு வாழ்கவே!
(நிலை மண்டில ஆசிரியப்பா)
- செ. நாகநந்தினி, பெரியகுளம், தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.