முதுமையைப் போற்றுவோம்...! - 21
முதியவர்கள் உழைக்காமல்
படுத்திருக்கவில்லை
உழைத்து உழைத்தேப் படுத்தனர்
முதியவர்கள் நல்வாழ்வுக்குப் பயணச்சீட்டு
தந்துவிட்ட கைத்தடி ஏந்திய நடத்துனர்கள்
முதியவர்கள் உதவாமல் இல்லை
தமது வாழ்வையே உதவிக்குக் கொடுத்துவிட்டு
முதுமையை நாடினர்
முதியோரின் மருத்துவச் செலவு
அவர்களது உதவிக்கு நாம் செலுத்தும்
நன்றிக்கடன்
ஐம்புலனையும் தந்தாலும்
நன்றிக்கடன் அடையாது
அவர்களுக்கென ஓய்வு
நமது வீட்டில் தரும் வரை
துன்பம் தராமல் மடிய வேண்டுமென்று
சொல்லும் சொற்கள்
தெய்வத்தின் இதயத் துடிப்பொலி
முதியோர் இல்லம் முதியோருக்கு
எமன் இல்லா நரகம்
ஈன்ற பிள்ளையின் இல்லமே
முதுமையில் கிடைக்கும் கருவறை வாசம்
வாழட்டும் நம் அருகிலேயே வாழட்டும்
மலரட்டும் முதுமையில் மகிழ்ச்சி...!
- செ. நாகநந்தினி, பெரியகுளம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.