இந்த உலகத்தைக் காலடியில்...?
தினமும் உன்னை
சந்திக்கத்தான் செய்கிறேன்
இருந்தாலும் என் காதலைச்
சொல்லமுடியவில்லை …
கண்ணுக்கு அழகிய பெண்கள்
கடந்து செல்லும் போது
என் கண்ணெதிரே
உன் முகம்
பார்க்கவிடாமல் தடுக்கின்றாய் …
தினமும் பேசிக்கொள்கிறோம்
இருந்தும் நம்
காதலை வெளிப்படுத்த
தெரியாமல் …
உயிருக்கு உயிராய்
நேசித்தும் சொல்ல
முடியாமல் தவிக்கின்றோம்...
உன் கண்கள்
என்னைத் தீண்டும் போது
என் விழிகள்
மெய்மறந்து விடுகின்றது …
உன் புன்னகை
என்னைச் சொல்லவிடாமல்
தடுக்கின்றது …
நம் மௌனம்
கலையும் காலம்
தூரமில்லை...
சொல்லிவிடு
இந்த உலகத்தையே
உன் காலடியில்
சமர்ப்பிக்கிறேன்...
- த. சத்யா, இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.