த. சத்யா
தமிழ்நாட்டில் இராஜபாளையம் நகரில் வசித்து வரும் இவர் வரலாற்றுப் பாடத்தில் முதுகலைப் பட்டமும், கணிப்பொறி பயன்பாட்டில் பட்டயமும் பெற்று கணிப்பொறி பயிற்சி மையம் ஒன்றில் பயிற்றுனராகப் பணியாற்றி வருகிறார். விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வமுடைய இவர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற காலத்தில் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இவர் 2005-ம் ஆண்டில் விளையாட்டுப் போட்டிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு விருதான "சுவாமி விவேகானந்தர் விருது" பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்கு அடுத்து இலக்கியத்திலும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள இவர் தமிழ் சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் கவிதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். ஓவியம் வரைவதிலிலும் ஈடுபாடு கொண்ட இவர் அதிலும் கூட சில பரிசுகளைப் பெற்றிருக்கிறார். மேலும் இவர் தான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரு நூலாக்கி வெளியிட வேண்டும் என்று முயன்று வருகிறார்.
சிறுவர் பகுதி - குட்டிக்கதை
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.