நம்பிக்கை

நம்பிக்கைதான் நம்
வாழ்வின் உயிர்மூச்சு
அடுத்த நொடி என்ன நடக்கும்
என்பது நமக்கு
தெரியாது - ஆனால்
இன்றும் பல
ஆண்டுகள் நாம்
உயிர் வாழ்வோம் என்ற
நம்பிக்கையில் தான்
நம் வாழ்க்கைச் சக்கரம்
ஓடிக் கொண்டிருக்கின்றது
இல்லறம் நல்லறமாய்
அமைய கணவன்
மனைவியிடையே
நம்பிக்கை வேண்டும் …
ஒரு நிறுவனம்
நல்வழியில் சென்றிட
மேலதிகாரி சக ஊழியர்களிடம்
நம்பிக்கை வைக்க வேண்டும் …
பக்தருக்கு தெய்வத்திடம்
நம்பிக்கை வேண்டும் …
இப்படி நாம்
வாடும் வாழ்க்கையின்
ஒவ்வொரு சின்ன
சின்ன விசயத்திலும்
நம்பிக்கை வைக்க வேண்டும்
முதலில் நம்மீது நாம்
நம்பிக்கை வைக்க வேண்டும்
நம்மால் முடியும்
என்று நினைக்க வேண்டும்
ஒவ்வொரு மனிதனின்
வெற்றிக்குப் பின்னால் இந்த
நம்பிக்கைத் தான் ஒளிந்து இருக்கின்றது
நமது ஆற்றலில்
தகுதியில்
நம்பிக்கை வைக்க வேண்டும்
கடின உழைப்பாலும், திட்டமிட்ட
செயலாலும் எனது குறிக்கோளை
அடைந்தே தருவேன்
என்ற நம்பிக்கை
உன்னுள் பிறக்க வேண்டும்
வெற்றியை அதிர்ஷ்டத்தாலோ
குறுக்கு வழியிலோ அடையமுடியாது
கடின உழைப்பால் மட்டுமே
வெற்றி எனும் கனியை
சுவைக்க முடியும்
நம்மால் முடியாது
என்று நினைக்கும்
மனம் தான் …
உன்னால் முடியும்
என்று நினைக்க வைக்கும்
சில நேரங்களில்
தோல்விகளை சந்திக்க
நேரிடலாம் - ஆனால்
தோல்வியே நம்
வாழ்க்கையில்லை …
தோல்வியில் தான் வெற்றியின்
ரகசியம் இருக்கின்றது
ஆகவே
நம்பிக்கை இழக்காத
நெஞ்சுரம் வேண்டும்
என்று நினைத்துக்கொள்
யானைக்கு தும்பிக்கைபோல
மனிதனுக்கு நம்பிக்கை தான்
வாழ்க்கை …
அசைக்க முடியாத
நம்பிக்கை இருந்தால்
நீ
கண்டிப்பாக ஒரு நாள்
வரலாற்று ஏடுகளில்
பேசுப்படுவாய் இது
நிச்சயம்!
- த.சத்யா, இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.