தேடல்கள்
அன்பே என்
ஒவ்வொரு தேடல்களும்
உன்னைச் சுற்றியே
செல்கிறது
உறங்கும் போது
உன் மடியைத் தேடுகின்றது
என் தலை...
உறக்கத்தில் உன்
கனவுகளை தேடுகின்றது
என் தூக்கம் …
விழித்தவுடன் உன்
முகத்தை தேடுகின்றது
என் கண்கள் …
குளித்தவுடன் முகம்
துடைக்க நீ நீட்டும்
துண்டை தேடுகின்றது
என் கைகள் …
அலுவலகத்தில் யார்
அழைத்தாலும் உன்
குரலைத் தேடுகின்றது
என் காதுகள் …
பார்க்கும் முகத்திலெல்லாம்
உன் முகம் தேடுகின்றது
என் பார்வை …
பேசும் வார்த்தைகளிலெல்லாம்
உன் பெயரைத் தேடுகின்றது
என் உதடுகள் …
பார்க்கும் பேசும்
பழகும் முகமெல்லாம்
நீயாக இருக்க மாட்டாயா ?
என் நிழல் கூட
உன்னை
மட்டுமே தேடுகின்றது
என்று என்
அத்தனை தேடல்களிலும்
நீ மட்டுமே இருக்கின்றாய்
நீ வினாவாய் இருப்பாயா ?
இல்லை
நீ விடையாய் இருந்து
முற்றுப்புள்ளி வைப்பாயா ?
- த.சத்யா, இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.