விடைபெற மனமில்லை!
நமக்கிடையே ஊடல்கள்
இருந்தாலும் உன்
கண்கள் எனை
பார்க்க மறுப்பதில்லை …
நமக்கிடையே மௌனங்கள்
இருந்தாலும் நம்
உதடுகள் ஒன்றோடு ஒன்று
பேசிக்கொள்ள மறுப்பதில்லை …
நமக்கிடையே சண்டைகள்
ஆயிரம் இருந்தாலும்
நம் கண்கள் இரண்டும்
சந்திக்க மறந்ததில்லை …
தூரமாய் நீ
நின்றாலும் என்
கால்கள் உன்னை
நாடிவர மறுத்ததில்லை…
அன்பே
ஊடலும் கூடலும் தான்
காதல் என்பதை
இன்னுமா உனக்குப்
புரியவில்லை …
என இருப்பிடம்
தூரமாய் இருந்தாலும்
என் இதயம்
என்னவோ உன்னிடம்
தானே இருக்கின்றது …
உன்னைப் போலவே
என் பேனாவும்
என்னிடம் கோபம் கொள்கிறது
உன்னிடம் விடைபெற
விரும்பாமல்…!
- த. சத்யா, இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.