மே தினம்
இன்று மேதினம்
தோழிலாளர்கள் தினம்
உழைப்பவர்கள்
உழைத்தால் வேண்டாம்
என்றா சொல்வோம்
சந்தோசமாக அனுமதிப்போம்….
அனுமதிக்கக் கூடாது
அறியாத பருவத்தில்
பிஞ்சுக் கைகளால்
பெரியவர்களுக்குச் சமமாக
உழைக்கும்
குழந்தைத் தொழிலாளர்களை
அனுமதிக்கக் கூடாது …
படித்துப் பட்டம்
வாங்க வேண்டிய
கைகளில்
மூட்டைகளைச் சுமக்கும்
சிறுவர்களையும்
பேரிங்கைக் கைகளில்
ஏந்தி நிற்கும்
சிறுவர்களையும் தான்
இன்றுவரை நாம்
பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறோம் …
இந்தப் பருவம்
அவர்களின் வாழ்க்கையில்
வசந்தம் வீச வேண்டிய
பருவம் …
வசந்த காலத்தில்
பூத்துக் குலுங்க வேண்டிய
அவர்கள் காய்ந்து கருகி
உதிர்ந்து விடும் நிலையில்
தள்ளப்படுகின்றனர்...
நாட்டின் எதிர்காலமும்
வளமும் இளைஞர்கள்
கையில்தான் இருக்கின்றது
என்பதை மனதில் கொண்டு
“குழந்தைத் தொழிலாளர்களை”
பள்ளிக்கு அனுப்புவோம்
அவர்கள் எதிர்காலம்
வளம் பெற பாடுபடுவோம்”
- த. சத்யா

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.