அன்பு நிலைக்குமா?
மனிதனின் உணர்ச்சிகளில்
மிகப் பண்பட்டது
காதல், அன்பு, பாசம், நேசம்
காதலை எத்தனை பேர்
காதலாய் பார்க்கிறார்கள்...?
சிலருக்கு அது ஒருவகை
மயக்கம் …!
சிலருக்கு அது ஒருவகை
காமம் …!
உண்மையாய் காதலிப்பவர்கள்
எத்தனை பேர் இந்த
உலகத்தில்…?
கணக்கெடுத்தால்...
ஏமாற்றம் தான் மிஞ்சும்!
ஆனால்
அனைத்தையும் தாண்டி
இந்த உலகத்தில்
சிலரிடம்
அன்பு இருக்கத்தான் செய்கிறது
அன்பான உள்ளங்களை
நேசியுங்கள் …
உங்கள் அன்பை
வெளிப்படுத்தி …
இந்த உலகத்தில்
அன்பு மட்டுமே
நிலையானது என்று
புரிந்து கொள்ளுங்கள்!
- த. சத்யா, இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.