சத்தம்
ஒன்றுடன் ஒன்று மோதுகையில் துளிர்க்கும்,
ஒன்றுடன் ஒன்று இணைகையில் வளரும்,
ஒன்றும் காற்றின் கூட்டிணைவு சத்தம்.
சத்தம் அளவோடு பிறந்தால் இரசனை.
சித்தம் கிறங்கிடும் தித்திப்பில் சுரணை.
பித்தம், தித்தமும் மொத்தமாய்ப் பிரிவினை.
வேரான அடிப்படைச் சத்தம் ஓங்காரம்.
பேரான முத்துமொழி, சத்தத்தில் பிரசவம்.
சீரான மொழி, பிழையுச்சரிப்பில் பாழாகும்.
பார்வையற்றோனுக்குச் சத்தம் அடையாளம்.
ஆர்வப் பாடகனின் குரல் – சத்தம் பொக்கிசம்.
சோர்வைக் கலைக்கும் இனிய இசைச் சத்தம்.
இதயத் துடிப்புச் சத்தம் உயிரிற்குத்தரவாதம்.
கைதட்டற் சத்தம் பிரசங்கியின் ஊக்கம்.
கைவச நித்திரையைக் குறட்டைச் சத்தமழிக்கும்.
கத்தல் சத்தத்தில் இரத்தம் கொதிக்கும்.
பித்தம் கொதிக்கும், மூத்தல் வேகமாகும்.
சத்தங்கள் பலவகை, நவரசங்களாய் இழையும்.
-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.