வேதா இலங்காதிலகம்
இலங்கையிலுள்ள கோப்பாய் எனும் ஊரில் பிறந்த வேதா, இலங்கையின் கழுத்துறை மாவட்டத் தேயிலை, ரப்பர் தோட்ட நிர்வாகியான இலங்கா திலகம் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். வாழ்வாதாரத்துக்காக 1986-ல் டென்மார்க் நாட்டிற்குச் சென்ற கணவரைத் தொடர்ந்து 1987-ல் இவரும் தன் மகன், மகள் ஆகியோருடன் டென்மார்க் சென்றார். அங்கு டெனிஷ் மொழியைக் கற்று பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மகன் இயந்திரவியல் தொழில்நுட்பமும், இவர் மகள் தகவல் உதவியாளராகவும் படித்துள்ளனர். இவரது மகள் தற்போது இலண்டனில் உள்ள சிறந்த மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
தந்தை நகுலேஸ்வரர் ஊக்குவிப்பால் 1976-ல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் துவங்கிய இவர் சிறு சஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், சில தமிழ் இணைய இதழ்கள் போன்றவற்றில் எழுதி வருகிறார். இவர் 2002-ல் "வேதாவின் கவிதைகள்" என்ற கவிதை நூலையும், 2004-ல் "குழந்தைகள் இளையோர் சிறக்க" மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு நூலையும், 2007ல் கணவருடன் இணைந்து "உணர்வுப் பூக்கள்" எனும் வாழ்வியல் கவிதைகள் நூலையும் எழுதி வெளிக்கொண்டு வந்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கவிதை
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.