பொய்யில்லாப் பொய்கள்
பொய்யில்லாப் பொய்கள்
பொய்யுள்ள பொய்கள்
ஏய்க்கின்ற சொற்கள்.
ஆய்வுகள் குழப்பம்.
பொய் செய்யாதாரில்லை.
பொய் பெய்வதென்பது
தூய்மை வாழ்வைத்
தீய்க்கும் காய்ச்சல்.
பொய்யை வேய்ந்தால்
தீய்ந்து அழிவாராதலால்
வாய்மைத் தென்றலில் நீந்தி
மெய்யான மெய் கொய்யலாம்.
பொய்யில்லாப் பொய்களால்
மெய்ப்பித்த வாக்குமூலம்
பொய்கையாம் மேற்குலகில்
மெய்யான அகதிநிலை.
மெய்யான மெய்யெல்லோ ஒளி!
பொய்யுள்ள, பொய்யில்லாத
பொய்களைத் தையுங்கள்.
வையுங்கள் பகிரங்கத்தில்...!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.