இலக்கணம் மாறினால்...?
நீல வான்வெளியில் நிர்மலமாய்,
கோலமுடன் பறக்கும் நித்தமுமாய்.
சிறகு விரிக்கும் சுதந்திரமாய்,
உறவு கொண்டாடும் உன்னதமாய்.
வஞ்சகமற்ற அழகுருவாய்,
வடியாத சுறுசுறுப்பு நடையாய்க்…
காதலுறவிற்கு உதாரணமாய்க்
கவிபாடும் ஒரு கருப்பொருளாய்…
காதலும் அழகோடு இயல்பாய்,
காதல்விடு தூதாகவும் சரித்திரத்தில்.
பிணையிழந்த பிரிவுத் துயரிவ்வினத்தின்,
இணையில்லாச் சிறப்பு இகலோகத்தில்.
களி பொங்குமதன் காதல் வாழ்வின்,
வழித்துணையை ஒன்றிழந்தால்
இயற்கைக் காதல் இலக்கணம் மாறினால்,
இசைந்து உயிரிழக்கும் இணைப்புறா.
-வேதா.இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.