நிலையூன்ற வேண்டியவை!
நற்குணம் உயரத்தில் தக்க வைக்கும்.
உயர உயர ஒருவன் போகலாம்.
சிகரம் எட்டிப் பிடிப்பதுமாகலாம்
வைரமாய் புகழில் ஒளிர்தலுமாகலாம்.
துயரமவன் ஊனக்குணம் மாறாதது.
முயற்சி ஏணியில் மேலே ஏகினும்
பயிற்சியான நல்ல குணம் ஒருவனை
உயரத்தில் நிலையாகத் தக்க வைக்கும்.
ஊனக் குணம் இழப்புகளைக் குவிக்கும்.
நல்ல திறந்த மனத் தூய்மை
தொல்லையற்ற வாழ்வைத் தடை செய்யும்
எல்லாம் சொல்லுமவன் திறந்த வாயால்.
பொல்லாத கேடன்றோ அள்ளித் தரும்.
பொய்யைப் பேசி பொய்யாய் வாழ்வதிலும்
மெய்யைக் கூறி மெய்யாய் வாழலாம்.
மெய்யாக மெய்யை ஏற்பவர் யாருளர்!
பொய்யுக்குத் தான் எத்தனை வரவேற்பு பாருங்கள்!
பிறரின் அழுக்குக் கால்கள் உங்கள்
சிறந்த இதயத்துள் அடி பதிக்கலாமா!
அறவே இடமளிக்காது, பதிலாக
அறிவை, அறத்தை நிலையூன்றிவிடுங்கள்.
-வேதா.இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.