சூரியனே…!சூரியனே…!!
சூரியனே! சூரியனே! அன்று உன்னை
நேரில் பார்த்திடக் கொள்ளை ஆசை.
எரிக்கும் அனற்கதிர் வீசி ஊரில்
பொரிப்பாய் கண்ணை அனல் உண்மை.
சந்திரப் பொன் தகடென இங்குன்னை
சுந்தரமாய்ப் பார்க்கிறேன் ஆகா! ஆற்புதம்!
இந்திர போகமோ இதுவென்று என்மனம்
சிந்துஐதி போடுதே கொள்ளை ஆச்சரியம்.
குளிர் முகில்கள் வடிகட்டித் தரும்
குளுமைப் பரிதி இங்கு காணலாம்.
காலைப் பாஸ்கரன் எழுகின்ற காட்சி
மாலைச் சந்திரனோவெனும் ஒரு மாட்சி.
வட துருவத்திலவன் ராஐரீக விஐயம்
கோடையில் மட்டும் சுழலும் நிசம்.
வருண சாலமாய் இயற்கை மட்டுமா!
சுவர்ணவிக்கிரகச சொற்ப ஆடை மனிதரும்!
குளிர் விலங்கறுத்த வீட்டுக் கைதியாளர்
குளிப்பு வெயிலில், வெளியே களிப்பு!
குளிரில் இறுகிப் புன்னகை தொலைத்து
களிப்பு மலர்ந்து விரிந்த சிரிப்பு.
தீயில் வாட்டிய இறைச்சி விருந்து.
சாய்வு, கூடாரத்துள் இயற்கையை ரசிப்பு.
சூரியன் கண்டு சுகிக்கும் மக்கள்
பூரிக்கும் அசைவிங்கு இந்திர விழாவெடுப்பு!
- வேதா இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.