வேதாவின் அகர வரிகள்
‘அறம் செய்ய விரும்பு’
அவ்வையின் ஆத்திசூடி
செவ்வையாய் ஏத்தியபடி
செழித்தது பல அடி……
1. அக்கிரமம் தவிர்.
2. அகங்காரம் விலக்கு.
3. அகந்தை கொள்ளாதே.
4. அகம்பாவம் அழிவு தரும்.
5. அகவிருள் நீக்கு.
6. அங்கவீனனுக்கு இரங்கு.
7. அச்சம் அழி.
8. அசமந்தம் அனர்த்தம்.
9. அசுத்தம் கைவிடு.
10. அசூயை அழி.
11. அஞ்ஞானம் விலக்கு.
12. அட்சரம் பயில்.
13. அட்டூழியம் பண்ணாதே.
14. அடக்கம் சிறப்பு.
15. அடாவடித்தனம் வேண்டாம்.
16. அடிமைப்படாதே.
17. அடுத்துக் கெடுக்காதே.
18. அதர்மம் அழி.
19. அதிகாலை துயில் நீங்கு.
20. அந்தரங்கம் பேணு.
21. அநாதைக்கு உதவிடு.
22. அநீதியை ஆதரிக்காதே.
23. அப்பியாசம் அழகு தரும்.
24. அமைதி பொன் பெறும்.
25. அலங்கோலம் தவிர்.
26. அலட்சியம் தேவையற்றது.
27. அவச் சொல் தவிர்.
28. அவதானம் அர்த்தமுடைத்து.
29. அழிச்சாட்டியம் ஆகாதது.
30. அழுக்காறு அழிவு தரும்.
31. அளந்து கொடு.
32. அறம் செய்தல் புண்ணியம்.
33. அறிவு தேடு.
34. அன்பு செய்.
35. அனுபவம் கோடி பெறும்
- வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.