துன்பத்தின் பசை!
ஆசை கற்பனைத் தேரேறி ஓடும்.
வீசையாய் அற்புதக் கனவு காணும்.
பசையது துன்பப் பயிரின் விதை.
வீசை எவ்வளவென்று தூர உதை!
ஆசை அறுத்தோன் பற்றற்றோன்.
ஆசை நிறைந்தோன் பசையுள்ளோன்.
ஆசையின் முயற்சி திருவினையாகும்.
ஆசையின் பெருக்கம் அழிவாகும்.
அடங்காதது, அளவற்றது, இதயத்தில்
நடமிட்டு எக் கணமும் ஓசையிடும்.
தடமிடும் ஆசைத் தூசை அகற்ற
உடம்பு அழிந்தாலும் முடியாதது.
ஐந்து புலனாலும் பெருகி மனிதனின்
ஐக்கியம் குலைத்து ஐசுவரியம் அழிக்கும்
ஆசைக்குப் பூட்டிட யாரால் முடியும்!
ஆசையின் எதிரி ஏமாற்றத்தால் முடியலாம்.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.