பாலைவனப் பூஞ்சோலை
பால் வீதியில் சுழலும் ஒரு
நூல் இல்லாப் பூகோளப் பந்தில்,
நால் வகை வளமுடை தாயகத்தில்,
சோலைவனக் கால நிலை இன்பம்.
காலைப் பள்ளி யெழுச்சி இன்பம்.
மாலைக் காட்சியும் மகோன்னதம்.
மலைப்புத் தரும் மாட்சிமைகளை விட்டு
மேலை நாட்டிற்கு இடம் பெயர்ந்தோம்.
மூலைக்கு ஓர் உறவாய்ச் சிதறினோம்.
மாலைக்கு மாலை மனம் வாடுமெமக்கு
பாலைவனப் பூஞ்சோலை ஊடகங்கள்.
தொலைத்ததைத் தேடும் கானல் நீராயிங்கு
வலை பின்னுகிறோம் வானலையில் உறவுக்கு.
தலை கோதும் தளம், திறமைக்குக் களம்.
கலை, மொழி வலையிது, விலையற்றது.
பாலைவனப் பூஞ்சோலை தான் ஊடகம்.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.