அறிவானது மயங்குகிறது
தானாகவெது கனிவது
இயற்கையது இனிமையானது.
தட்டுவது, புகையூதியது
கனிவிப்பது பலாத்காரமானது.
விடாது முயல்வது ஊக்கமது.
அடாது அநாகரீகமாயது படாது
பாடது படுவது இழிவானது.
பண்பற்றது, அருவருப்பானது.
மனிதமது விநோதமானது, விசித்திரமானது.
ஐந்தறிவது நல்லது பேணாது
மயங்குவது தீது கொடியது,
விலங்கறிவது முண்டியடித்து எழுகிறது.
கொடியது தனது பொறாமையது.
அயலது செய்வது பார்த்து
பொருமுகிறது, குளம்புகிறது.
போட்டியது எழுகிறது புகைகிறது.
ஆற்றாமையது ஆட்டுகிறது. ஏக்கமது
மனிதத்து வெட்கமது அழிக்கிறது.
மரமது ஏறுகிறது, மாங்கனியது
பறிக்கிறது. நளினமிது, நாடகமிது.
-வேதா இலங்காதிலகம்,ஓகுஸ், டென்மார்க்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.