இலட்சியம் எட்ட...!
இலட்சியம் உயர்ந்தது.
அலட்சியம் கசந்தது.
இலக்கினை அமைக்க
இலக்கணமாய்த் தொடரலாம்.
இலச்சினை பதிக்கும்
இலட்சியப் பாதையில்,
இடர்கள் இயற்கை.
தொடர்வது துணிவு.
பணிவும் பண்பும்
அணிதரும் இரகசியம்.
ஏணியல்ல ஆணவம்.
பிணிதரும் கர்வமொழி.
மதிப்பு, கௌரவம்
கொதிப்பு அடக்கும்.
ஏற்றுக் கொள்ளல்
ஆற்றல் ஊக்கி.
எத்தனை அறங்கள்!
புத்தியில் படியாது,
பொத்தல் வழியாக
பொந்துக்குள் போவதேன்!
உந்தும் உயரெண்ணத்தை
ஏந்துங்கள் மனக்கிண்ணத்தில்!
கந்தக எண்ணம் நீக்கி,
சந்தண வாசனை தாங்குங்கள்!
சிந்துங்கள் புன்னகை!
பந்தங்கள் இறுகும்!
அந்தம் வரையுங்களுக்கு
ஆனந்தம் சொந்தம்!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.