தேன்கூடு
வாழ்வின் மரபியல் கோடு
காட்டும் உறவுக் கூடு
மீட்டும் இராகம் சுகத்தோடு,
கிட்டும் இனிமை தேன்கூடு.
இராணித் தேனீ மனைவியாய்
இராசா, குழந்தைகள் தேனீக்களாய்
பாச வாசம் வீசியாடும்
நேசக் குடும்பம் தேன்கூடு.
வட்டமிட்டு அன்பில் பிணைந்து
விட்டுவிலகாது ஆவலாய் இணைந்து,
கொட்டி அன்பைப் போர்த்திடும்
பட்டுக் காதலுறவும் தேன்கூடு.
ஏற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து,
குற்றங்களை மன்னித்திடும் அனுபவத் துளிகள்
முற்றும் நிறைந்த தேனடைகளால் உறவாகும்
கொற்றம் நிறை வாழ்வது தேன்கூடு.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.