காகிதப் பூக்கள்
மணம் வீசா மலர்கள்
தினம் வாடா மலர்கள்.
மனம் கவரும் வர்ணங்கள்
இனம் பல வகைகள்.
காகிதப்பூ மனிதப் படைப்பு.
மனிதப்பூ பிரம்மப் படைப்பு.
காகிதப் பூக்கள் கசங்கினால்
சோபிதமே சிதைந்துவிடும்.
காகிதப் பூக்களில் நீர் விழுந்தால்
கவின்பெறு வனப்பு மாறிவிடும்
மானிடப்பூ நீதியிதழ் பிரிந்தால்
மானுடமே பொய்த்ததுவிடும்.
காவியப்பூக்களின் நாயகர்கள்
மனிதப்பூக்களின் மாதிரிகள்.
காகிதப்பூவாய்க் கசங்காது
சிரஞ்சீவிப் பூக்களாய் வாழ்கிறார்கள்.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.