வறுமைச் சிறையுடைக்க!
உணவின்மை, பணமின்மை,
அறிவின்மை, பொருளின்மை
பாதுகாப்பின்மையெனும் பல
இன்மைத் தோப்பு வறுமை.
மொழி வறுமை, இனவறுமையால்
இடம் பெயர்ந்து அல்லலுறுகிறோம்.
துன்பம, தரித்திரம், கதியற்ற
தன்மைகளின் கொடுமை வறுமை.
பாதுகாப்பின்மை இன்றி
ஏதுமற்ற தமிழர் நிலை.
யாதும் இழந்து எம்
முதுகு கூனிய நிலை.
பணமின்மை பரிதாபமாய்க்
குணம் மாற்றும். அறிவு
மணமும் காற்றோடேகும்.
பணமற்றவன் பிணமென்பார்.
அறிவின்மை நெறியற்ற,
குறிதப்பிய, வாழ்வுப்
பொறியில் வீழ்த்த
பறிக்கும் குழி.
உணவின்மை கொடிது.
உணர்வைப் பறித்து
மானம் மரியாதையையும்
தானமாக்கும் வயிற்றுக்காய்.
பொறுமை இங்கு
வெறுமையைக் கூட்டும்.
வறுமையின் எதிர்ப் பயணம்
சுறுசுறுப்பான மானுடவினை.
வறுமைச் சிறையுடைக்க
வெறிச்சோடிய வாழ்வைக்
குறிவைத்து முறி!
எடு!விடாமுயற்சியை!
-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.