உறவுமுறை அழைப்பு...
உருபு மயக்கம் தமிழிற்கு உண்டு.
உறவு மயக்கம் மனிதருக்கு உண்டு.
சிறப்புடன் பெயர் கூறி அழைத்தல்
உறவில் மேல் நாட்டுப் பாணி.
உறவு முறை கூறுமெம் பழக்கம்
உறவிற்குத் தரும் ஒரு நெருக்கம்.
உறவு முறையழைப்பு உயர் உரிமை.
உறவின் பாதுகாப்பு, உறவின் விளைநிலம்.
உறவுமுறையில் அழைக்கும் நிராகரிப்பு
உறவுப் பெறுமதி புரியாத நினைப்பு.
இறவாத ஊக்குவிப்பு உறவுமுறை அழைப்பு,
உறவிற்கு உபநிடதம், உறவிற்கு உரம்.
சிறப்பு கௌரவம், மன ஆபாசமழிக்கும்,
துறவு இன்றித் தூக்கி எறியவியலா
நறவுடை நம்பிக்கை நடவு. இறுகிய
உறவுமுறை அழைப்பு மனிதநேய நிறைவு.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.