காடும் அழகும்
வனம், கானகம், புறவு அடவியெனும்
அனந்தப் பெயருடைய மரங்களடர் நிலம்.
ஐவகை நிலத்திணையில் முல்லை காடு சார்ந்ததாம்.
ஐக்கியமானால் காடு அதிசயம் சொர்க்கம்.
சுந்தரவனக்காடுகள் வங்காளதேசத்துப் பரப்பிடையும்
சுந்தரமுடைய பறவைகளிற்கு அமேசான் காடும் சிறப்பாம்.
மூங்கில் காடுகள் யப்பானில் அழகாம்.
மூங்கில் எழுப்பும் சத்தமே அற்புதமாம்.
யேர்மனியில் சுற்றுலாவிடமாம் கருப்புக் காடாம்.
கவாய்தீவில் வெப்பமண்டலக் காடு அழகாம்.
கனோலா மஞ்சள் மலர்வனம் சீன அழகாம்.
கேரளஅழகு சுந்தனமரக்காடு முட்புதர்காடு.
பிரான்சில் லவெண்டர் மரவனம் அழகாம்
இலாவண்ய இயற்கைக் காட்டில் ஆதிவாசிகள் புரண்டார்.
செயற்கை அழகில் இன்று மயங்குகிறார்.
காட்டு அழகு நேசிப்பவனுக்கு ஒரு விதம்.
காட்டுலாவில் அமைதி ஓய்வு புத்துணர்ச்சியுருவாகும்.
காற்று சுத்திகரிப்பால் நல் மூலிகைக் காற்று
காடு வளம் காப்பதில் நாடு வளமாகிறது.
நீர்வளப் பாதுகாப்பு அடர்வன ஈரப்பதம் சிறப்பு.
நறுமுகையே நாடியேகு காடுக்கேதுமில்லை ஈடு.
வெறும் அற்ப மாயை செயற்கையோடு.
பெறுமதி! காட்டுக் குடை தேடு.
சிறுமதி காடழிக்காதே! வெப்பமாகும் நாடு
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.