கதவிடுக்குகளில்...
எங்கள் வீட்டுத்
தோட்டத்தில்
புரட்சி புரட்சி
எனக் கேட்கிறது
பறவைகளின் ஒலி
எங்கள் வீட்டுத்
திண்ணையில்
அழியாத சுவடுகளாய்
மூதாதையரின்
அமர்விடங்கள்
எங்கள் வீட்டுப்
பரணையில்
பழைய புத்தகக்
கட்டுக்குள்
நட்பின்
அடையாளங்கள்
எங்கள்
வீட்டின்
சன்னலருகே
முத்தமிடும்
நிலவொளி
எங்கள் வீட்டு
முற்றத்தில்
எப்போதும்
காத்திருக்கிறேன்
அணிலோடு
விளையாட
எங்கள் வீட்டுக்
கதவிடுக்குகளில்
கண்ணை
வைத்துப் பாருங்கள்
தெரியும்!
இவளின் முகமழிந்த
கோலங்கள்
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.