கா. ந. கல்யாணசுந்தரம்
வேலூர் மாவட்டம், காவனூர் கிராமத்தில் 17.12.1955 ல் பிறந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுவை வசிப்பிடமாகக் கொண்டவர். யூனியன் வங்கியில் முப்பத்தெட்டு ஆண்டுகள் பணிபுரிந்து 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்று தற்போது சென்னையில் தங்கியிருக்கிறார்.
1970 - 80 ஆம் ஆண்டுகளில் மரபுக் கவிதைகள், மெல்லிசைப் பாடல்கள் மற்றும் புதுக்கவிதைகள் என்று எழுதி வந்த இவர் 1999, ஜூலை மாதத்தில், “மனிதநேயத் துளிகள்“ (ஆங்கில மொழிபெயர்ப்பு இணைந்தது) எனும் எனது முதல் ஹைக்கூ நூலை வெளியிட்டார். இவருடைய துளிப்பாக்கள் பல தமிழ் இதழ்களில் இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. “மனசெல்லாம்...” எனும் இரண்டாவது ஹைக்கூ கவிதைநூல் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும், “காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்“ எனும் ஹைக்கூ ஆய்வு நூலொன்றும் அச்சுக்குச் சென்றுள்ளது.
செய்யாறு தமிழ்ச் சங்கம் தோற்றுவித்து தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நிறுவனத் தலைவராக பணியாற்றிய இவர் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார். இவர் தனது கவிதைகளுக்காகச் சேவைச் செம்மல், மனிதநேயக் கவிஞர் போன்ற பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.