மானுடம் பிழைக்க...!
சங்கம் வளர்த்த தமிழ் வளர்த்தது
பாரம் பரியத்தின் உன்னதமாய்...
அறிவியல் நோக்கோடு மனிதத்தை !
வாழ்வியல் புரிதலின் புனிதத்தை !
இயற்கையின் வளங்களெல்லாம்
இயல்பாய் இருத்தலோடு வாரிவழங்கின...
விளைபொருள் களஞ்சியத்தை
இரசாயனக் கலப்பின்றி வாழும் உயிர்க்கு !
நடையுடை பாவனைகள் நாளும் உண்ணும்
துரிதவகை உணவுகளும் நலம்கெட
மனிதத்தைப் புழுதியில் எரிகிறதே !
மனஉளைச்சல் நாளும் தருகிறதே !
மென்பொருள் தொழில்நுட்பக் கைப்பேசி
இன்றியமையாப் பொருளாகி கைகோர்த்து நாளும்
மனிதநேயமெனும் மகத்தான மாண்புதனை
மரபணு மூலத்தில் மறக்கடிக்கச் செய்கிறதே !
இப்பொழுதும் ஆம் என்றால் ஒன்றிணைவோம் !
தப்பாமல் வாரத்தில் ஒருநாளேனும் மானுடம்
தழைக்கவோர் விதிசெய்வோம் மாநிலத்தில் !
பிழையில்லை நாம் யாரென்று அறிந்திடுவோம் !
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.