வாழ்வியல் கல்வி
மகத்தானச் சந்தைக்கு
மடிவிரிக்கும் பாரதத்தில்
உள்ளங்கை நெல்லிக்கனியாய்
வளம்காணத் திறனறியும்
தொழிற்கல்விக் கொள்கைதனைக்
கண்டறிவோம் !
மாணவனை மையப்படுத்தி
நல்லதொரு வாழ்வியல்
கல்விதனைப் பள்ளிதோறும்
முனைப்புடனே முன்னிறுத்தி
மேம்பட்ட நிலைப்பாட்டில்
தமிழர் பண்புதனைக் காத்திடுவோம் !
பன்னோக்கு வளர்ச்சிக்கான
முன்னேற்றப் பாதைகளை உருவாக்கி
பார்போற்றும் நற்கல்வி
துறைதோறும் துறைதோறும்
செயலாக்க ஒன்றிணைவோம்
மறுக்காமல் !
பதுக்கல் புரட்டு பொய்மை
வன்மம் கையூட்டு இவையனைத்தும்
வேருடனே அழித்தொழிக்கும்
நீதி நெறி வகுப்புகளை
உறுதிமொழி ஏற்பதுபோல்
பிள்ளைகட்கு முதல்வகுப்பு
முதற்கொண்டே போதிப்போம் !
சீர்மிகு கல்வியுடன் நடைமுறைப்
பண்பாட்டு போதனையைக் கையாண்டால்
மதம்பிடித்த யானைகளாய் உலவுகின்ற
சமுதாயச் சீர்கேடுகளை அடக்கியாள
அங்குசமாய் உருவாகும் நல்லதொரு
இளைஞர் அணி !
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.