பார்வைக்காக மட்டுமல்ல!
மின்னல் தாக்கிய
இரவொன்றில் பூத்தது...
தாழை மலர்
******
பார்வைக்காக மட்டுமல்ல
பாதுகாக்கவும்
இயற்கை
******
மனதைப் பறிகொடுத்து
உயிர்மை தழைத்தது
கட்டுக்குள் எனது பயணிப்பு
******
எனது பாதைகள்
வேற்றுமையானது
ஆனால் தொலையமட்டேன்
******
எல்லா வகுப்பறைகளுக்கும்
இருப்பதில்லை
நான்கு சுவர்கள்
******
பொருட்களை விடச்
சேமிக்க ஏதுவானவை
தருணங்கள்
******
இயற்கை நமது மதம்
கோயிலானது
இந்த உலகு
******
மரணித்தல் இயற்கைதான்
எனினும் அழகின் ஆராதிப்பில்
உதிரும் இலைகள்
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.