எப்போது கிடைக்கும்?
பயணிக்கும் போது
ஆன்மாவின்
இருப்பிடம்
தூய்மையாகிறது!
அன்பை
வெளிப்படுத்தி
அமைதியின்
பிறப்பிடம் நோக்கி
பழகிய காலங்கள்
இன்பக் கேணியாய்
நெஞ்சில்
பிரவாகமாகிறது!
துன்பத்தைப்
பிறரிடம்
பகிர்ந்து
கொள்ளும் போது
ஆறுதலான வரைபடம்
மனதில் உருவாகிறது!
என்னிடம்
அலைபாயும்
எண்ணங்களின்
வண்ணங்கள்
உள்ளக் கிண்ணங்களில்
நிரம்பி வழிந்து
கொண்டிருக்கின்றன...
காலத் தூரிகைகளே...
வண்ணங்கள்
வீணாகிப் போனாலும்
பரவாயில்லை !
ஒரு நல்ல ஓவியம்
எப்போது கிடைக்கும்?
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.