ராமேஸ்வரம் தந்த வரம்
அன்புள்ளம் கொண்டவர்
பண்பு பலஉற்றவர்
மதங்களைக் கடந்தவர்
மனங்களைப் படித்தவர்
ஏழ்மையிலே உழன்றவர்
வாழ்வினிலே உயர்ந்தவர்
தமிழ் மொழியில் பயின்றவர்
தரணி வியக்கச் செய்தவர்
விஞ்ஞானம் அறிந்தவர்
மெய்ஞானம் தெரிந்தவர்
எளிமையாக வாழ்ந்தவர்
ஏற்றம் பல பெற்றவர்
ஆசான் போற்றும் மாணவர்
அகிலம் வாழ்த்தும் நாயகர்
ஏவுகணை விட்டவர்
அதிசயிக்க வைத்தவர்
மரங்கள் பல நட்டவர்
மாணவரைத் தொட்டவர்
விடுமுறையைத் தவிர்த்தவர்
கடுமையாக உழைத்தவர்
வள்ளுவனைப் படித்தவர்
படித்தவழி நின்றவர்
அக்கினிச் சிறகை விரித்தவர்
ஐநாவை வென்றவர்
நதி இணைப்பைச் சொன்னவர்
மதியில் உயர்ந்த மாமனிதர்
தனி மரமாய் நின்றவர்
கனி மரமாய் இனித்தவர்
- முனைவர் ஜெயந்தி நாகராஜன், ஊரப்பாக்கம், சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.