வலியது எது?
சஉயிரின் வலியது
காதல்.
காதலின் வலியது
சாதல்.
சாதலின் வலியது
மோதல்.
மோதலின் வலியது
தயக்கம்.
தயக்கத்தின் வலியது
தொடக்கம்.
தொடக்கத்தின் வலியது
நடுக்கம்.
நடுக்கத்தின் வலியது
முயற்சி.
முயற்சியின் வலியது
முற்றுப்புள்ளி.
முற்றுப்புள்ளியின் வலியது
காற்புள்ளி.
காற்புள்ளியின் வலியது
வெற்றிடம்.
வெற்றிடத்தின் வலியது
இருள்.
இருளின் வலியது
ஒளி.
ஒளியின் வலியது
உள்ளம்.
உள்ளத்தின் வலியது
நம்பிக்கை.
நம்பிக்கையின் வலியது
தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கையின் வலியது
நீ.
நீயின் வலியது
நீ மட்டுமே! எழு புறப்படு
நீயால் மட்டுமே
உலகம் முழுமைப் பெறுகிறது.
- கார்ஜே, திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.