அம்மா
பிள்ளைகள் வாழ
தன் வாழ்வை மறந்தவள்!
முகமறிந்து பசிபோக்கியவள்
தன் பசியை நினைக்காதவள்!
பிள்ளைகளுக்கென்றால்
பார்த்துப் பார்த்து வாங்கிக்கொடுப்பவள்!
தனக்கென வரும்போது
பிறகு பார்ப்போம் என்பாள்!
குடும்பம் எனும் போது
தன்னையே அடமானம் வைத்தவள்!
தன்னை மீட்பவர் யாரென
அறியாப் பேதையாய் தனிமையில்...
தனியாய் இருப்பினும்
உள்ளம் எல்லாம் நிறைத்து
வைத்திருப்பாள் உறவுகளை...
எந்த அளவுகோளாலும்
அளக்க முடியாத
அன்பை ஆர்ப்பரிப்பவள் அன்னை.
ஒருநாள் கொண்டாடக்கூடியவள் அல்ல
அம்மா...
உயிருள்ளவரை கொண்டாடப்பட
வேண்டியவள் அவள்!
முதியோர் இல்லங்களைக் குறைத்து
உறவுகளோடு பிணைப்போம்.
தாயுள்ளத்தோடு இருப்பவர்
அனைவரும் அன்னையரே.
- முனைவர் நா. சுலோசனா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.