முட்களும் வேண்டும்...!
கன்னட மூலம்: முனைவர் ஹேமா பட்டண ஷெட்டி
வலிகள் நம்பிக்கைத் துரோகம் செய்வதும் இல்லை
வாய் திறப்பதும் இல்லை
கர்ப்பத்திலிருந்து வெளிவருவதும் இல்லை
உடலுக்குள் முளைத்து கை, கால்
கண், காது அனைத்தும்
பிரசவ வேதனையில்
மனதில் காத்திருந்த ஆவல்கள்
பாசம்,நேர்மைகளால் அழகுற்று
என் நெஞ்சுக்கூட்டினுள்
மட்டும் எனதாகி
அசைகின்றன
எண்ணத்தில் பதற்றமில்லை
சொற்களில் ஆடம்பரமில்லை
சத்தத்தில் சங்கீதம் இல்லை
நிசப்தவலி தத்தளிக்கின்றன
ஆத்மார்த்தத்தின்
திவ்விய தொடர்புப் பாலமாக
வலிகள் வெறும் சத்தமானால்
வாழ்வில் என்ன இருக்கு?
சொல்ல இயலாத குறிக்கோள்
காலத்தின் அடியில்
மனதின் கரையில்
கனவு தோன்றுகையில் முட்கள்
வேண்டும்…
பூ
முட்கள் தோன்றுகையில்
வலிதளிர்விட
கனவுக்கு நினைவின் வண்ணம் பூச
காலத்தோடு நடக்கும் பொறுமை
வேண்டும்…
இந்த வலியை
நிசப்தமாக முக்க வேண்டும்
அப்போது சத்தத்தில் படமெடுக்கும்
படத்தில் சிரிப்பின் தோற்றம்
கதிர் கதிராக பால்
நிரம்பும் நிம்மதி
தமிழாக்கம்: - முனைவர் க. மலர்விழி & முனைவர் தெ. வாசுகி
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.