முனைவர் க. மலர்விழி

பெங்களூர் பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் கன்னடதுறைத் தலைவராகப் பணியாற்றி வரும் மலர்விழி கமலநாதன் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், புதுமைப்பித்தன் சிறுகதைகளை ஒப்பிட்டு அதில் ஆய்வு செய்து குப்பம் திராவிட பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை கன்னடத்தில் “வைரமுத்துரவர மூவத்து மூறு கவிதைகளு” என்று மொழியாக்கம் செய்து அது பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘ஒன்பதாம் திருமுறை’ கன்னட மொழிபெயர்ப்பை, காந்தளகம் பதிப்பகம் வெளியீடு செய்துள்ளது. சங்க இலக்கியங்களில் குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து, பரிபாடல், நற்றிணை முதலியவற்றை பேராசிரியர் தா. கிருட்டிணமூர்த்தி அவர்களுடன் இணைந்து கன்னட செம்மொழி மையத்திற்காக மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். புதுமைப் பித்தனின் வாழ்க்கை வரலாற்று நூலை சாகித்திய அகாதெமிக்காக கன்னடத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அகிலனைப் பற்றிக் கன்னடத்தில் நூல் எழுதியுள்ளார். “கன்னட கவி சித்தலிங்கையாவின் நாற்பது கவிதைகள்” என்ற நூலை மதுமிதா அவர்களுடன் இணைந்து தமிழில் மொழியாக்கம் செய்து அது புதுப்புணல் படைப்பாக வெளி வந்துள்ளது. ‘தியானலிங்கா குரு தந்த குரு’ கன்னட மொழியாக்கம், வெளியீடு - ஈசா மையம்.கோவை செம்மொழி மாநாட்டில் தமிழ் கன்னட மொழிபெயர்ப்பு பற்றிய கட்டுரை சமர்ப்பித்தார். திசை எட்டும், கணையாழி மற்றும் புதுப்புனல், திணை, புதுகைத் தென்றல், கிழக்குவாசல் ஆகிய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் மற்றும் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.
*****
குறுந்தகவல்
கன்னடத்தில்:
தேவனூரு மஹாதேவ
கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்
கன்னடத்தில்:
டாக்டர் பி.டி. லலிதா நாயக்
கன்னடத்தில்:
டாக்டர் பி.டி. லலிதா நாயக்
கவிதை
கவிதை - மொழிபெயர்ப்புக் கவிதை
கன்னடத்தில்:
கவிஞர் மூட்னாகூடு சின்னசாமி
கன்னடத்தில்:
கவிஞர் மூட்னாகூடு சின்னசாமி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.