நிழல் - வெளிச்சம்
(கன்னடத்தில்:கவிஞர் மூட்னாகூடு சின்னசாமி)
உன் வெங்காட்டில்
என்னுடைய சூறாவளி
நீ பெருங்கடற்கரை
நான் தென்றல்
உன் மலைமுகடுகளில்
நான் கால்வாய், பள்ளத்தாக்கு
உன் மரக்கொடியில்
நான் இலை, பூ, அழகு
உன் இடி முழக்கத்துக்கு
நான் கொடிமின்னல் அழகு
உன் குதூகல இடிக்கு
நான்தான் கார்முகிலின் இரதம்
நீ முத்துமழை கொட்ட
நான் ஆலங்கட்டி
உன் தெளிந்த ஆகாயத்திற்கு
நான்தான் வானவில்
தானியம் பச்சைப்பயிர் நீ
நான் பசுமை
தீப்பொறி நீ ஆனால்
நான் அதனுடைய உயிர்
நீ அருவி
நான் சலசலவென்ற நாதம்
உன் சரோவரத்தில்
நான் மலரும் தாமரை
உன்னுடைய இருதயம்
என்னுடைய புளகாங்கிதம்
என்னை ஆட்கொண்டநீ வெளிச்சம்
உன்னில் ஒட்டிய நான் நிழல்.
- முனைவர் கே. மலர்விழி, பெங்களூர் & கவிஞர் பா. தென்றல், காரைக்குடி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.