நெகிழிக் குடுவையினுள்...!
கன்னட மூலம்: இந்திராஷரண் ஜம்மலதின்னி

உணவு உண்ணாமல் இருக்கலாமோ என்னமோ?
தண்ணீர் அருந்தாமல் இருக்கலாகுமோ?
இறங்குவது தொண்டைக்குள்
மெதுவாக மிடக்கு மிடக்காக
வேகமாக கட, கட
சத்தமிடும் வயிற்றிற்குக்
குளிர்ச்சியை உண்டாக்குகின்ற
மேலிருந்து கீழே மட்டும்.
கீழேயிருந்து மேலே
என்றும் பாயாத,
அறியாத-
அதன் மூலம்
எங்குள்ளது.
அறிஞர்களுக்கும் யாருக்கும்
கண்டுபிடிக்க முடியவில்லை
தாழ்த்தப்பட்டவர்கள்
உயர்ந்தோர்கள்
செல்வந்தர்கள் - ஏழைகள்
முன்னேற விருப்பபட்டவர்களின்
காலைப் பிடித்து இழுத்தவர்களை
நாம் காலைப் பிடித்து இழுத்ததால்தான்
நீங்கள் பலமாக எழுந்து நிற்கும்படியானது
என்று கூறியவர்களுடைய
அனைவரின் தொண்டையிலும்
பதற்றம் இல்லாமல்
இறங்கும்
வெறும் சிவப்பாகவே
கொதித்தாலும்
நான் வண்ணமற்றவள் என்று
பச்சைப்பொய் கூறிய
யாராலோ எப்போதும் தொடவைத்துக் கொண்டு
யாரையுமே என்றும் தொடாமல்
உன்னால் மட்டம் தட்டினார்
யார் கண்ணிலும் காணாமல்
சில்லென்றுதன் போக்கில் பாயும் நீ...
கைக்குக் கிடைத்த போதும்
சிலர் கைக்குச் சிக்கிய போதும்
ஏன்? என்னென்னமோ ஆகிறாய்?
தண்ணீரே சிராய்ப்பான வலியைக் கொடுத்தது ஏன்?
இப்போது சிறைப்பட்டு இருக்கின்றாய்...
நெகிழிக் குடுவையினுள்...
உன்னுடைய எல்லா சிறிய பெரிய
பொய்மையும் தூய்மையும்
காணாமல் மறைந்து இருக்கின்றன
பணம் கொடுத்தோருக்கே எல்லாம்...!
தமிழாக்கம்: - முனைவர் க. மலர்விழி & முனைவர் தெ. வாசுகி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.