அன்பின் அனிச்சம் மலரே
அன்பின் அனிச்சம் மலரே
அழகின் பிறப்பிடம் நீயே!
ஆதவனாய் என்னுள்ளத்தில் உதித்து
ஆர்ப்பரிக்கிறாய் அலையாய் நீயே!
மனதை நெருடி மௌனத்தைச் சமைத்து
விலகிச் சென்று அளிக்கிறாய் விருந்து
பேசும் பொழுது தீர்ந்திடும் கோபம்
பேசாமல் சென்றால் நெஞ்சம் வேகும்
இதழ் விரிக்காமல்
பூக்கிறாய் நாவசைவில்
வெல்லப் பாகின்றி
இனிக்கிறாய் முத்தமிழில்
ஈக்களாய் நானும்
உன்னை மொய்க்க
சிந்திச் செல்கிறாய்
மகரந்த நினைவை
உள்ளுக்குள் உறையும்
உணர்வாய் நானும்
உனக்குள் தொலைத்தேன்
உயிரை நானும்
நீல வானம்
நிறம் மாறும்
நீங்கா நினைவுத்
தூங்காமல் வாழும்
என்னுயிர் மன்னவனே
ஏன் இந்தப் பிடிவாதமே!
- சரவிபி ரோசிசந்திரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.