ஹைக்கூ கவிதைகள்
வறுமைத் தாய்
விளம்பரப் பலகை
தாய்ப்பால் விற்பனைக்கு
*****
பிடரியைத் தாழ்த்துகிறோம்
பிடாரி ஏறுகிறாள்
தலையில்
*****
மழை நின்றப் பின்னும்
மரம் பெய்கின்றது
புலம்பல்கள்
*****
சொல்வது போல எளிதே
சொல்லாதனவும் செய்யும்
இந்திய இளைஞர்கள்
*****
வாய் நலமானால்
நலமாகும்
வாழ்க்கை
*****
முரண்பட்ட
வாழ்க்கை
பேச்சுத் தொழிலாளி
*****
வேற்றுமையில்
ஒற்றுமை காணும் நாடு
காதல் தேசம்
*****
பெண்ணுக்குப் பொருள் தந்து
மணம் செய்பவனுக்கு
நடுகல் வழிபாடு
*****
தெரிந்துவிடுகிறது
உதவும் மனப்பான்மை
விபத்து
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.