இரண்டாவது குழந்தை
சொத்துத் தகராறு
வருமெனக் கருதி
பெற்றுக் கொள்ளவில்லை
இரண்டாவது குழந்தை
நாற்பதைக் கடந்ததால்
வேண்டாம் என்றனர்
இரண்டாவது குழந்தை
முதல் குழந்தைக்கு
சிசேரியன் என்பதால்
இரண்டாவது
பெற விரும்பவில்லை
குழந்தையைக் கவனிக்க
ஆள் இல்லை என்று
வேண்டாம் என்றனர்
அடுத்த குழந்தை
45+ என்பதாலும்
குழந்தையின் எதிர்காலத்தை
எண்ணி அஞ்சியும்
இரண்டாவது வேண்டாமாம்
அன்பைப்
பகிர்ந்தளிக்க மனமின்றி
வேண்டாம் என்று
பணியிடம்
பணிப்பளு காரணமாக
வேண்டாம் என்று
முதல் குழந்தை
ஆணானதால்
இரண்டாவது தேவையில்லை என்று
இப்படி
இப்படிக்
காரணங்கள்
இன்னும் பல
மறுபுறம்
ஐம்பதைத் தாண்டியும்
ஒரு குழந்தை பெற
இயலாமல் தவிக்கும் தம்பதிகள்
வாடகைத் தாய்
வகையறாக்கள்
கரு
உருவாகியப் பின்
அபார்ட்டும் அன்னைகள்
கருக்கலைப்பை
வாடிக்கையாகக் கொள்ளூம்
மணமாகா
மங்கைகள்
குழந்தைப் பேற்றில்
வாணிகம் செய்யும்
மருத்துவமனைகள்
வேடிக்கையாகிவிடுகிறது
அவ்வப்போது
வாழ்க்கை
எண்ணம்போல் வாழ்க்கை
எண்ணி எண்ணி வாழ்க்கை
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.