பள்ளிக்கூடம் போகாமல்...!
பள்ளிக்கூடம் போகாமல்
பாடம் படிக்கிறாய்!
நூலகம் செல்லாமல்
அலைபேசியில் வாசிக்கிறாய்!
எழுத்தாணி இல்லாமல்
எழுதப்பழகிக் கொண்டாய்!
இணையம் வழியாகவே
இன்பத்தமிழைக் கற்றுக்கொண்டாய்!
விசைப்பலகையில் நீயும் சொடுக்கிட
வினாவிற்கான விடைகள் வருமே...!
விரும்பிய நேரத்தில் படிக்கலாம்
விவரங்கள் அட்டவணைத் தருமே...!
விஞ்ஞான உலகின்
விசுவரூப வளர்ச்சியே!
கல்வித்துறை வரலாற்றில்
மாபெரும் தளர்ச்சியே!
பள்ளியில்லா கல்வியிலே
வளர்வதில்லை ஞானமே!
ஆசிரியர் அரவணைப்பிலே
வளர்வதே மெய்ஞானமே!
மூடிய பள்ளியெல்லாம்
மரண ஓலமிடுதே!
மழலை மூச்சுக்காற்றின்றி
சுவாசிக்கச் சிரமப்படுதே!
கொரோனோ தொற்று
உயிரைக் கொல்லுமே!
கல்வியெனும் மருத்துவம்
உயிரைக் காக்குமே!
மீண்டெழும் நாள்
சீக்கிரம் வருமே!
மீளும் வரை நாம்
முகக்கவசம் அணிவோமே!
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.